இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட் என்பதும் வெளிநாடு செல்வதற்கு மட்டுமின்றி அடையாளச் சான்றாகவும் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஸ்போர்ட்டில் ஒரு சில மாற்றங்களை செய்வதற்கு ஆன்லைனில் அல்லது பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மாற்றி வரலாம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
இந்திய பாஸ்போர்ட்
இந்திய பாஸ்போர்ட் என்பது வெளிவிவகார அமைச்சகத்தால் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம். சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக பாஸ்போர்ட் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாஸ்போர்ட் என்பது முக்கியமான அடையாள சான்று ஆவணமாகவும் செயல்படுகிறது.
10 ஆண்டுகள்
இந்திய பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதும், அதன் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட்டில் புகைப்படம் மாற்றுவது எப்படி?
பாஸ்போர்ட்டில் புகைப்படங்களை மாற்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக ஒருவர் பாஸ்போர்ட் எடுக்கும்போது தாடியுடன் இருந்திருக்கலாம், ஆனால் அவர் தாடியை தற்போது எடுத்துவிட்டால் வெளிநாடு செல்லும்போது குழப்பம் ஏற்படலாம். எனவே அவர் தனது பாஸ்போர்ட்டில் தாடியில்லாத புகைப்படத்தை மாற்றி கொள்வது நல்லது. எனவே பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்
ஆன்லைனில் பாஸ்போர்ட் புகைப்படம் மாற்ற!
பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் passportindia.gov.in என்ற இணையதளத்தில் இருந்து படிவம் 2 என்பதை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த படிவத்தை நிரப்பிய பின்னர் நிர்வாகப் பிரிவு பகுதியில் இருந்து 'பாஸ்போர்ட் மறு வெளியீடு' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஆவணங்கள்
இப்போது 'Change in Existing Personal' என்பதை கிளிக் செய்து பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனையடுத்து விரைவில், புகைப்பட மாற்றத்துடன் கூடிய புதிய பாஸ்போர்ட்டை பெறலாம்.


Click it and Unblock the Notifications