ஆதார் கார்டில் போட்டோ மாற்றம் செய்வது எப்படி.. அதனை எப்படி ஆன்லைனில் டவுன்லோடு செய்வது?

இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ஆதார் அட்டையாகும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்கு, மொபைல் எண், வருமான வரி தாக்கல், அரசு உதவிகள் இப்படி எதற்கும் ஆதார் கட்டாயம். தற்போது பான் கார்டு உடனும் இணைக்க அரசு அறிவித்துள்ளது.

இப்படியொரு முக்கிய ஆவணத்தில் உங்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஆதார் கார்டு எடுத்து பல வருடம் ஆகிவிட்டது. அதில் போட்டோ சரியாக இல்லை. அதனை மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி மாற்றம் செய்வது என்பதைத் தான் பார்க்க விருக்கின்றோம்.

போட்டோ மாற்றம் எப்படி

போட்டோ மாற்றம் எப்படி

பொதுவாக முன்பெல்லாம் ஆதாரில் ஏதேனும் திருத்தம் என்றால் அதற்காக, ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று அப்படியில்லை, பல சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, ஆதார் கார்டில் உள்ள போட்டோவினை மாற்றம் செய்வது எப்படி? என்பதை தான்.

ஆதார் மையம் செல்ல வேண்டும்

ஆதார் மையம் செல்ல வேண்டும்

இதற்காக நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சென்று மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஆதார் சேவை மையத்திலும் சென்று மாற்றிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். (இது திருத்தப் படிவம் அல்லது புதுப்பிப்பு படிவம் என்பதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்).

கட்டணம் உண்டா?

கட்டணம் உண்டா?

இதனையடுத்து படிவத்தினை சரியாக நிரப்பி அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்பித்து, பயோமெட்ரிக் விவரங்களை வழங்கலாம். அவர்கள் உங்களது பயோமெட்ரிக் மற்றும் போட்டோவினை எடுத்துக் கொள்வார்கள். இதன் பிறகு உங்களது ஆதார் கார்டில் இப்போது புதிய புகைப்படதை புதுபிப்பார்கள். இதற்காக உங்களிடம் 25 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். இதன் பிறகு புதுபிப்பு கோரிக்கை கொண்ட ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்.

ஆதார் நிலை என்ன?

ஆதார் நிலை என்ன?

உங்களுடைய ஒப்புதல் சீட்டில் உள்ள URN நம்பரை வைத்து உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். அப்படி மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் புதிய ஆதார் கார்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதனை எப்படி ஆன்லைனில் டவுன்லோடு செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

ஆன்லைனில் பதிவிறக்கம் எப்படி?

ஆன்லைனில் பதிவிறக்கம் எப்படி?

உங்களது போட்டோ மாற்றம் செய்யப்பட்ட புதிய ஆதார் கார்டினை https://uidai.gov.in/ என்ற இணையத்தில் சென்று, My Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.

அதில் dowloand Aadhaar என்பதை கிளிக் செய்யவும். இது https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற மற்றொரு பக்கத்தில் திறக்கும். உங்களுக்கு இப்போது மூன்று ஆப்சன்கள் உண்டு. ஒன்று Aadhhar number, Enrolment ID, Virtual ID என்ற மூன்று ஆப்சன்கள் இருக்கும்.

இதில் Aadhhar number என்ற ஆப்சனை கிளிக் செய்து, 12 இலக்க ஆதார் நம்பரினை கொடுக்கவும்.

அதன் பிறகு 1 want a masked Aadhaar என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு கேப்சா லட்டரினை கொடுத்து கிளிக் செய்யவும். பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதனை பதிவு செய்து டவுன்லோடு e- aadhaar என்பதை கிளிக் செய்து, அதன்பிறகு verify and download என்பதை கொடுக்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+