பொருளாதார ரீதியாக பின்தங்கியோரை ஆதரிக்கும் வகையில் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் "பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்". இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2000 வீதம் 3 தவணைகளாக தொகை செலுத்தப்படுகிறது. PM கிசான் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய மொபைல் நம்பரை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது முக்கியம்.

PM கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகள் டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பர் (DBT) மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகின்றனர். இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என்ற வீதத்தில் 3 தவணைகளில் செலுத்தப்படுகிறது.
உங்கள் மொபைல் நம்பரைப் அப்டேட் செய்வது ஏன் முக்கியம்?: தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. எனவே எந்த ஒரு தகவலானாலும் சரி உங்களுடைய மொபைல் நம்பருக்கு தான் அனுப்பப்படுகிறது. எனவே எப்போதும் புதுப்பித்த நிலையில் மொபைல் நம்பரை வைத்திருப்பது முக்கியம். மேலும் PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய இணையதளத்திலேயே நீங்கள் நம்பர் புதிதாக மாற்றி இருந்தால் அப்டேட் செய்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் நம்பரை எவ்வாறு அப்டேட் செய்வது?:
ஸ்டெப் 1: அதற்கு முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் உள்ள "Farmers Corner" என்ற பகுதியைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அதன் பின் "Update Mobile Number" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு எண் அல்லது ஆதார் எண்ணை வழங்கவும். உங்களிடம் ஆதார் எண் இல்லையென்றால், உங்கள் PM கிசான் பதிவு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களை update செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 5: உங்கள் புதிய மொபைல் நம்பரை என்டர் செய்து, கேப்ட்சாவை கொடுத்து, "Search" என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், உங்கள் நம்பரை அப்டேட் செய்ய, "Edit" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 6: அதுவே "No record found" என்று காட்டினால், உங்கள் மொபைல் நம்பரை மாற்ற கீழே உள்ள முறையைப் பின்பற்றவும்.
உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை வேறு ஒரு புதிய நம்பர் மூலம் மாற்ற விரும்பினால் இந்த முறை செல்லுபடியாகும்.
ஸ்டெப் 1: முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவும். பின்னர் "Beneficiary Status" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: இப்போது "know your registration number" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: இப்போது, அந்தப் பக்கத்திலிருந்து பதிவு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் முந்தைய பக்கத்திற்குச் சென்று, உங்கள் பதிவு எண் மற்றும் படக் குறியீட்டை என்டர் செய்து, "Get data" பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: இந்தப் பக்கத்தில், உங்கள் மொபைல் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்களைக் காண்பீர்கள். இப்போது உங்கள் மொபைல் எண்ணை மாற்ற மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்-ஐ பின்பற்றவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications