இந்தியாவில் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக பான் அட்டை பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய நிதி ரீதியான அனைத்து தகவல்களையும் இந்த பான் எண்ணை மட்டுமே கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
பான் அட்டையை நாம் புகைப்பட அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தி வருகிறோம். பான் அட்டையில் நாம் நம்முடைய தகவல்களை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளக் கூடிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பான் அட்டையில் இருக்கக்கூடிய நம்முடைய புகைப்படத்தை எப்படி ஆன்லைனிலேயே மாற்றலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரித்துறை, தனிநபர்கள் எளிதான ஆன்லைன் வாயிலாகவே பான் அட்டையில் இருக்கும் தங்களின் புகைப்படத்தை மாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன்படி அங்கீரிகரிக்கப்பட்ட NSDL அல்லது UTIITSL தளங்களில் நாமே எளிமையாக பான் அட்டையில் இருக்கும் நம்முடைய புகைப்படத்தை அப்டேட் செய்ய முடியும்.
எப்படி புகைப்படத்தை மாற்றுவது:
· முதலில் NSDL அல்லது UTIITSLஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
· அதில் முகப்பு பக்கத்தில் PAN Correction/Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
· இதனை அடுத்து Form 49A என்பதை தேர்வு செய்ய வேண்டும் அதில் Photo Mismatch என்பதை டிக் செய்ய வேண்டும்.
· இந்த படிவத்தில் உங்களின் பான் எண், முழுமையான பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்
· இதனை அடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டிய உங்களின் புதிய பாஸ்போர்ட் சைஸ் புகைபடத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
· புகைப்படம் JPEG வடிவத்தில் (4.5 செமீ x 3.5 செமீ) என்ற அளவில் கோப்பின் அளவு 4KB முதல் 300KBக்குள் இருக்க வேண்டும்.
· புகைப்படத்தை பதிவேற்றம் செய்த உடன் அதற்கான ஆதரவு வாகனங்கள் கேட்கும். அதாவது செல்லத்தக்க புகைப்பட அடையாள சான்று ஆவணமான ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
· அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்த உடன் 91 ரூபாய் உடன் ஜிஎஸ்டி சேர்த்து எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது திரையில் காட்டும். இந்த தொகையை யுபிஐ, நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் அட்டைகள் மூலம் செலுத்தலாம்.
· கட்டணத்தை செலுத்திய உடன் Acknowledgment எண் திரையில் காட்டும். உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கும் இந்த 15 இலக்க Acknowledgment எண் வரும். அதனை கொண்டு அடுத்து வரும் நாட்களில் புகைபடம் அப்டேட் ஆனதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புகைப்படம் மாறியதா என தெரிந்து கொள்வது எப்படி?: இதற்கு NSDL அல்லது UTIITSLஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களின் பான் எண் அல்லது 15 இலக்க Acknowledgment எண்ணை உள்ளிட்டு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications