யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் வங்கி சேவைகளை நம் வீட்டிற்கே கொண்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு UPI பரிவர்த்தனைகளை செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து வங்கி சேவைகளை பெறுவதற்கு பதிலாக வீட்டிலிருந்து பிறருக்கு பணம் அனுப்புவது, பணம் பெறுவது, பில் செலுத்துவது, ரீசார்ஜ் செய்து கொள்வது என அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்து வருகிறோம். UPI பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தினால் அவற்றோடு தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. எனவே அவ்வப்போது உங்களுடைய UPI பின் நம்பரை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பதிவில் உங்களிடம் டெபிட் கார்டு இல்லை என்றாலும் எப்படி UPI பின் நம்பரை மாற்றுவது என்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
UPI ஐடிகள் அனைத்தும் UPI PIN மூலம் பாதுகாக்கப்பட்டு, உங்கள் பேங்க் பேமெண்ட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. எந்த UPI ஆப்ஸிலும் உங்கள் டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி இந்தப் பின்னை மாற்றி அமைக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் UPI பின்னை மாற்ற வேண்டிய நேரங்கள் இருக்கலாம்.

டெபிட் கார்டு மூலம் உங்கள் UPI பின்னை மாற்றுவது எளிது, ஆனால் உங்களிடம் டெபிட் கார்டு இல்லையென்றால் என்ன செய்வது? கவலைப்பட வேண்டாம், டெபிட் கார்டு விவரங்கள் இல்லாமலும் உங்கள் UPI பின்னை நீங்கள் மாற்றலாம். டெபிட் கார்டைப் பயன்படுத்தாமல் கூகுள் பே அப்ளிகேஷனில் உங்கள் UPI பின்னை எப்படி மாற்றுவது என்பதைப் பார்ப்போம்.
டெபிட் கார்டு விவரங்கள் இல்லாமல் UPI பின்னை மாற்றுவது எப்படி?: உங்கள் UPI பின்னை மாற்றுவதற்கு 2 விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று "Forgot UPI PIN" மற்றொன்று "Remember UPI PIN".
நீங்கள் உங்கள் UPI பின்னை மறந்துவிட்டால், அதற்கு "Forgot UPI PIN" என்ற ஆப்ஷனை தான் பயன்படுத்தியாக வேண்டும். மேலும் உங்கள் UPI பின்னை மாற்ற வேண்டும் என்றால், அதற்கு கண்டிப்பாக உங்கள் டெபிட் கார்டு விவரங்கள் தேவைப்படும்.
இருப்பினும், உங்கள் பழைய UPI பின்னை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், "Remember UPI PIN" ஆப்ஷனைப் பயன்படுத்தி டெபிட் கார்டு விவரங்கள் இல்லாமல் UPI பின்னை மாற்றலாம். எனவே, உங்களிடம் டெபிட் கார்டு விவரங்கள் இல்லையென்றால், உங்கள் பழைய UPI பின்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களை பயன்படுத்தி எளிதில் UPI பின்னை மாற்றியமைக்கலாம்.
ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே அப்ளிகேஷனுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: அப்ளிகேஷனின் ரைட் சைடு கார்னரில் இருக்கும் ப்ரோபைல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: "Bank Account Settings" என்பதற்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: நீங்கள் UPI பின்னை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: "Change UPI PIN" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்களின் பழைய UPI பின்னை என்டர் செய்து, புதிய பின்னை அமைத்து அதை உறுதிப்படுத்தவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications