சென்னை: தற்போது இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களின் புகைப்பட, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான அடையாள ஆவணமாக ஆதாரை நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம்.
வங்கி கணக்கு தொடங்குவது ,ரேஷன் அட்டை பெறுவது, புதிதாக ஒரு சிம் கார்டு வாங்குவது என அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக கேட்கப்படுகிறது. நம்முடைய ஆதாருடன் செல்போன் எண்ணையும் சேர்ப்பது கட்டாயம். ஆன்லைன் வாயிலாக நம் ஆதார் தகவல்களை பயன்படுத்த வேண்டும் என்றாலும் நம் ஆதார் தகவல்களை சரிபார்ப்பது என்றாலும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு தான் ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

எனவே ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம். அது மட்டுமின்றி இவ்வாறு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பராமரிப்பதும் அவசியம். பொதுவாக ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. அதாவது ஒரே குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஆதார் கார்டுடன் ஒரே மொபைல் எண்ணை இணைக்கலாம் என்கிறது.
ஒரு ஆதாருடன் ஒரு மொபைல் எண்ணை தான் இணைக்க முடியும், ஆனால் பல ஆதாருடன் ஒரே மொபைல் எண்ணை இணைக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து வைப்பதன் மூலம் ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு வசதியை நாம் பெறலாம். குறிப்பாக தற்போது வங்கி கணக்கு தொடங்குவது, வங்கி கடன் பெறுவது, டிமாட் கணக்கு , பங்கு வர்த்தகம் ஆகிய அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் ஆன்லைன் கேஒய்சி நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
இதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது போன்ற ஆன்லைன் சேவைகளை நாம் எளிமையாக பெறவும் ஆதாருடன் மொபைல் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஓடிபி பெற முடியும். எனவே அனைவரும் கட்டாயம் தங்களின் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை இணைக்க முடியும் என்கிறது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்.
இதற்கு அதிகபட்ச வரம்பு எதையும் அந்த அமைப்பு நிர்ணயம் செய்யவில்லை. ஒரே மொபைல் நம்பரை ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவர்களின் ஆதார் கார்டுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு நபர் தன்னுடைய மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் வாயிலாக பரிசோதிக்கலாம். இதற்கு UIDAI இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் 'Aadhaar Services' என்பதை கிளிக் செய்து 'My Aadhaar' என்பதை தேர்வு செய்து அதில் 'Verify Email/Mobile Number' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை அடுத்து 'Verify Mobile Number' என்பதை தேர்வு செய்து மொபைல் எண், ஆஆதார் எண்ணை உள்ளிட்டு சப்மிட் செய்ய வேண்டும். நீங்கள் அளித்த மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் 'The mobile number you have entered is already verified with our records' என்ற தகவல் திரையில் காண்பிக்கப்படும்.
ஒரு வேளை அந்த எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் 'The mobile number you have entered does not match with our records' என்ற தகவல் காட்டும். உங்கள் வீட்டருகே உள்ள இ சேவை மையத்தில் எளிதாக நீங்கள் புதிய எண்ணை ஆதாருடன் சேர்க்கலாம்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications