எந்த ஒரு அரசாங்க திட்டம் ஆனாலும் சரி.. அதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற தடைகள் எதுவும் இல்லாமல் அந்த குறிப்பிட்ட திட்டத்திலிருந்து பயனடைய முடியும். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா? என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்றால் என்ன?: ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார திட்டமாகும். இது மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது. இந்த நன்மையைப் பெற தனி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தின் நன்மைகள் அனைவருக்கும் கிடைத்துவிடாது. குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் நன்மை கிடைக்கும். இந்த கார்டை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவிற்கான தகுதியை எவ்வாறு சரிபார்ப்பது?: ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவரா? என்பதைச் சரிபார்க்க வேண்டும். தகுதிப் பட்டியலின் கீழ் வருபவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்: கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
அமைப்புசாரா தொழிலாளர்கள்: தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தனிநபர்கள் ABY திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர்: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) தகுதி பெறுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள்: ஊனமுற்ற நபர்கள் அல்லது ஊனமுற்ற குடும்ப உறுப்பினரைக் கொண்டவர்களும் தகுதியுடையவர்கள்.
ஆதரவற்றோர்: நீங்கள் பழங்குடியினர் அல்லது ஆதரவற்ற சமூகங்களைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஆயுஷ்மான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?: உங்கள் மாநிலத்தின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லவும்.
உங்கள் அடையாளத்தை சரிபார்க்க, உங்கள் ஆதார் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை வழங்கவும். விண்ணப்பித்த பிறகு, நீங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பெறுவீர்கள், அதை நீங்கள் இலவச சுகாதார சேவைகளை பெற பயன்படுத்தலாம்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது தகுதியான நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான இலவச காப்பீட்டை வழங்குகிறது. நீங்கள் PBY திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக இருந்தால், ஆயுஷ்மான் கார்டைப் பெறுவது, பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையைப் பெறலாம்.
ஆயுஷ்மான் கார்டு பெற தகுதியை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?: முதலில் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PMJAY இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். ஹோம் பேஜில், 'Am I Eligible' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகுதியைச் சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். "14555" என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications