PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

சென்னை: ஈபிஎப் தொகையை பெற விண்ணப்பித்திருந்தால் அவர் ஆன்லைன் மூலமாக தொகை கிளைமாகிவிட்டதா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் எப்படி இந்த கிளைம் ஸ்டேட்டஸ்-ஐ தெரிந்து கொள்வது என்பதை பார்ப்போம்.

EPF அல்லது வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களிடையே சேமிப்பை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட அரசு திட்டமாகும். ஒவ்வொரு மாதமும், பணியாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் இருவரும் பணியாளரின் இபிஎஃப் கணக்கில் தனித்தனியாக ஊழியரின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிக்க வேண்டும்.

PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

இந்தத் திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு 8.5 % வட்டி விகிதம் கிடைக்கின்றது. மற்றும் பணியாளர் ஓய்வு பெற்றவுடன் திரும்பப் பெறலாம். சில நிபந்தனைகளின் கீழ் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு தங்கள் EPF கார்பஸை திரும்பப் பெறுவதற்கான வழிகளும் உள்ளது.

EPF கிளைம் ஸ்டேட்டஸ் -ஐ ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது: ஆன்லைன் மூலம்
EPF கிளைம் ஸ்டேட்டஸ் -ஐ சரிபார்க்கும் முன், ஊழியர்கள் தங்கள் EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது தொடர்பான கோரிக்கையை EPFO-க்கு டிக்கெட் மூலம் விண்ணம்பம் எழுப்ப வேண்டும். கோரிக்கை எழுப்பப்பட்டதும், EPF உறுப்பினர்கள் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் EPF ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ்-ஐ
சரிபார்க்கலாம்.

EPFO போர்டல் (UAN போர்டல்) மூலம் ஆன்லைனில் தங்கள் EPF ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.

ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலைப் பார்வையிடவும்.

ஸ்டெப் 2: 'Our services' என்பதைக் கிளிக் செய்து, 'For Employees' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: அடுத்து, வெப்பேஜின் திரையின் கீழே ஸ்க்ரோல் செய்து, இடது புறத்தில் உள்ள 'Services' பிரிவின் கீழ் உள்ள 'Know Your Claim Status' என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: பாதுகாப்பு காரணங்களுக்காக "Get redirected to Member Passbook application" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 5: இப்போது, நீங்கள் கேப்ட்சா, UAN நம்பர் ஆகியவற்றை என்டர் செய்து, 'Search' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 6: அடுத்து, உங்கள் PF அலுவலகத்தின் மாநிலம் மற்றும் மெனுவிலிருந்து உங்களின் தற்போதைய PF அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 7: உங்கள் PF கணக்கு எண்ணை என்டர் செய்யவும்.

ஸ்டெப் 8: இப்போது, 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் EPF ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ் திரையில் காட்டப்படும்.

UMANG போர்டல்

ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் UMANG மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்யவும்.

ஸ்டெப் 2: லாகின் செய்த பிறகு EPFO என்ற ஆப்ஷனைத் தேடவும்.

ஸ்டெப் 3: கிடைக்கக்கூடிய பல்வேறு ரிசல்ட்களிலிருந்து, 'Employee Centric Services' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

ஸ்டெப் 4: அடுத்து, 'Track claim’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்

ஸ்டெப் 5: இப்பொழுது திரையில், உங்கள் UAN நம்பரை என்டர் செய்து, 'Get OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 6: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ என்டர் செய்யது லாகின் செய்யவும்.

ஸ்டெப் 7: அடுத்த ஸ்கிரீனில் ட்ராக்கிங் ஐடி யுஏஎன் நம்பர் மற்றும் கிளைம் விண்ணப்பிக்கப்பட்ட தேதி ஆகியவை தெரியும்.

ஆன்லைனில் தங்கள் EPFO போர்ட்டலில் உள்நுழைவதில் வசதியில்லாத உறுப்பினர்களுக்கு, EPFO SMS மூலம் அனுப்புகிறது. இருப்பினும், இதை செயல்படுத்த, உறுப்பினர்கள் தங்கள் மொபைல் எண்ணை தங்கள் EPF கணக்கில் இணைக்க வேண்டும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN LAN வடிவத்தில் SMS அனுப்பவும்.

மேலே உள்ள 'LAN’ என்பது உங்கள் EPF கோரிக்கை விவரங்களைப் பெற விரும்பும் மொழியைக் குறிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+