வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 அன்று முடியவுள்ளது. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் ஏற்கனவே 4 கோடிக்கு மேல் ITR-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் வருமான வரி ரீபண்ட் குறித்த குழப்பத்தில் உள்ளனர். ரீபண்ட் தொகை பெறுவதற்கு வங்கி விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி ரீபண்ட் நிலையை நீங்கள் இணையதளத்திலேயே சரி பார்த்துக் கொள்ள முடியும். இந்தப் பதிவில் பான் கார்டு வைத்து எப்படி வருமான வரி ரீபண்ட் நிலையை தெரிந்து கொள்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
உங்களுடையை பான் கார்டை மட்டும் பயன்படுத்தி ஆன்லைனில் வருமான வரி ரீபண்ட்டை சரிபார்க்க, இந்த 2 முறைகளைப் பின்பற்றலாம்.

வருமான வரி இ ஃபைலிங் போர்ட்டலில் இருந்து ரீஃபண்ட் நிலையை எப்படி சரிபார்ப்பது?:
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ ஆன்லைன் இ ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்
ஸ்டெப் 2: உங்கள் கணக்கில் உள்நுழையவும். உள்நுழைய உங்கள் பாஸ்வேர்ட், PAN மற்றும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: அதில் "My Account" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: அதில் "Refund/Demand Status" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வருமான வரி ரீபண்ட்-இன் நிலை, மதிப்பீட்டு ஆண்டு, தற்போதைய நிலை, ரீஃபண்ட் வராததற்கான காரணங்கள் மற்றும் பணம் செலுத்தும் முறை பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.
NSDL TIN இணையதளம் மூலம் வரி ரீபண்ட் நிலையை எப்படி சரிபார்ப்பது?:
ஸ்டெப் 1: முதலில் NSDL TIN இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பின் மதிப்பீட்டு ஆண்டு மற்றும் உங்கள் பான் எண்ணை அதில் என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது ரீபண்ட் நிலையை சரிப்பார்க்க, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலே உள்ள இந்த ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் உங்கள் வருமான வரி ரீபண்டின் நிலையை சரி பார்க்கலாம்.
உங்கள் வருமான வரி ரீபண்டை சரியான நேரத்தில் பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
10 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், ITR-இல் உள்ள பிழை குறித்து வரி செலுத்துபவருக்குத் தெரிவிக்கப்படும். உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வருமான வரித்துறை உங்களுக்கு மெயில் அனுப்பும்.
மேலும், உங்களுடைய அக்கவுண்ட் தகவல்களில் உள்ள முரண்பாடுகள் ரீபண்ட் செயல்முறையை மெதுவாக்கும் என்பதால், உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் சரியாகவும், செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும். உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வருமான வரி அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட உங்களுடைய மொபைல் எண் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் சரியான நேரத்தில் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், வருமான வரி அதிகாரியை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.


Click it and Unblock the Notifications