நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சிம் கார்டு மோசடியில் சிக்கி ரூ. 80 லட்சத்தை இழந்தார். அந்த பெண்ணின் ஆதார் அட்டைக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை வைத்து மோசடிக்காரர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க, உங்களுடைய ஆதார் கார்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர்கள் எத்தனை என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
தொலைத்தொடர்புத் துறை (DoT) வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயனர், 9 மொபைல் நம்பர்கள் வரை பெறலாம். புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்காக டெலிகாம் ஆபரேட்டர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் முக்கிய ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்றாகும். ஆதார் கார்டு இவ்வளவு முக்கியமான ஆவணமாக இருப்பதால், பலர் அதனை மோசடி சம்பவம் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். ஆகவே உங்களுடைய ஆதார் கார்டு நம்பரை ஒருபோதும் பிறருடன் பகிராதீர்கள்.

மேலும் தெரியாமலேயே பிறருடைய ஆதார் நம்பரை வைத்து சிம்கார்டுகளை வாங்கி, அந்த சிம் கார்டுகளை பிறகு சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். உங்களுடைய ஆதார் கார்டின் கீழ் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
எனவே ஒருவரின் ஆதார் கார்டைப் பயன்படுத்தி எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்க, டெலிகாம் அனாலிடிக்ஸ் ஃபார் பிராடு மேனேஜ்மென்ட் & கன்ஸ்யூமர் ப்ரொடக்ஷன் (Telecom Analytics for Fraud Management and Consumer Protection - TAF-COP) என்ற ஆன்லைன் போர்ட்டலை DoT அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் இணையத்தளத்தைப் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் உங்கள் ஆதார் அட்டையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களின் எண்ணிக்கையை எவ்வாறு கண்டுபிடிப்பது?:
ஸ்டெப் 1: TAFCOP-இன் https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்கிற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் "Know your mobile connection" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய மொபைல் நம்பர், கேப்ட்ச்சா கோடை (Captcha) என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: நீங்கள் என்டர் செய்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: அதில் உங்கள் ஆதார் நம்பருடன் தொடர்புடைய அனைத்து எண்களையும் காண்பிக்கும்.
செயலில் உள்ள அனைத்து மொபைல் எண்களும் நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளவும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், அந்த மொபைல் நம்பரை நீங்கள் பிளாக் செய்து விடலாம். அதற்காக இந்த இணையதளம் உங்களுக்கு 3 விருப்பங்களை வழங்குகிறது. அவை "Not my number", "Not required" மற்றும் "Required".
TAF-COP போர்டல் மூலம் உங்களுடையது அல்லாத எண்களைப் புகாரளிக்கவும், தடுக்கவும் முடியும். "Not my number" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஐடியுடன் பதிவுசெய்யப்பட்ட நம்பரைப்பற்றி புகாரளிக்கலாம்.


Click it and Unblock the Notifications