மத்திய வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கென AIS for Taxpayers எனும் ஒரு புதிய மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய ஆப் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி கணக்கு குறித்த முக்கியமான தகவல்களை சில நொடியில் பெற முடியும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் ஊக்குவித்து வரும் வேளையில் அனைத்து துறையிலும் டிஜிட்டல் மற்றும் இணைய சேவைகளை கொண்டு வருவது மூலம் அரசு சேவைகளை விரிவாகவும், இருந்து இடத்தில் இருந்தே பெற முடியும்.
இந்த வகையில் AIS for Taxpayers எனும் ஒரு புதிய செயலி மூலம் TDS விபரம், TCS எனப்படும் Tax Collected at source, ஈவுத்தொகை வருமானம், வருமான வரி ரீபண்ட், வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற பல விவரங்களை பெறலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
டவுன்லோடு செய்வது எப்படி
AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஐஓஎஸ் போன் வைத்துள்ளவர்கள் : https://apps.apple.com/in/app/ais-for-taxpayers/id1571076423
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள்: https://play.google.com/store/apps/details?id=io.lntinfotech.AIStaxpayer&hl=en_US

AIS for Taxpayers ஆப்-ல் ரிஜிஸ்ட்ர் செய்வது எப்படி?
1. AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளவும்
2. பின்னர் பயனர்கள் இந்த செயலியில் அறிமுக விபரங்களை முழுமையாக புரிந்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்ற உடன் ரிஜிஸ்டர் செய்யும் பணிகள் துவங்க வேண்டும்.
3. ரிஜிஸ்டர் செய்ய பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிடவும்.
4. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள terms and conditions செக்பாக்ஸ்-ஐ டிக் செய்துவிட்டு Proceed என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5. இதன் பின் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் பதிவிட வேண்டும்
6. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு பயனர்கள் இதில் தங்களை ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
7. அதனைத் தொடர்ந்து பயனர்கள் 4 டிஜிட் கொண்ட ரகசிய எண் பதிவிட கேட்கப்படும். ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பின்பு தான் இது கேட்கப்படும், MPIN செட் செய்யப்பட்டால் அனைத்தும் தயார்.
8. அதன்பின் AIS for Taxpayers செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். இதனை ஏஐஎஸ் வலைதளத்திலும் பயன்படுத்த முடியும்.

TDS, ஈவுத்தொகை, வருமான வரி ரீபண்ட்
AIS for Taxpayers செயலியில் TDS, ஈவுத்தொகை வருமானம், வருமான வரி ரீபண்ட் பார்ப்பது எப்படி
1. MPIN செட் செய்யப்பட்ட பின்பு தயாரானதும். AIS for Taxpayers செயலியை கிளிக் செய்து MPIN கொடுத்து உள்நுழைய வேண்டும்.
2. பின்பு செயலியில் Annual Information Statement (AIS) கிளிக் செய்யவும்
3. இதன் பின்பு உங்களுக்கு தேவையான TDS, ஈவுத்தொகை வருமானம், வருமான வரி ரீபண்ட் போன்ற பல தகவல்களை கிளிக் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications