செகனண்ட் கார் வாங்கப் போறீங்களா? நம்பர் பிளேட் ஒன்னு போதும்.. உரிமையாளர் விவரங்கள் உங்கள் கையில்!

வேறொருவர் பயன்படுத்திய காரை வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் அந்த வாகனத்தின் உரிமையாளரைப் பற்றியும், வாகன உரிமத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த தகவல்களைத் தெரிந்து கொள்வது தற்போது முன்பை விட எளிதானதாகிவிட்டது. ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டை பயன்படுத்தியே இந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவில், அதன் விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

பழைய உரிமையாளரின் வாகன விவரங்களை நீங்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே எளிதில் சரிபார்க்க முடியும். பரிவஹன் இணையதளத்தை பயன்படுத்தி வாகன உரிமையாளரின் விவரங்களை சரிபார்க்கலாம். வாகனப் பதிவு எண்ணைப் பரிவஹன் இணையதளத்தில் பதிவிட்டு, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாகன உரிமையாளர் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

 செகனண்ட் கார் வாங்கப் போறீங்களா? நம்பர் பிளேட் ஒன்னு போதும்.. உரிமையாளர் விவரங்கள் உங்கள் கையில்!


ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ பரிவஹன் இணையதளத்தின் உள்ளே செல்லவும்.

ஸ்டெப் 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் மெனுவிலிருந்து 'Informational Services' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும், அதன் பிறகு 'Choose Know Your Vehicle Details' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: நீங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் உள்ளே செல்வதற்கு, அதில் கேட்கப்படும் தகவல்களை என்டர் செய்யுங்கள். அதே நீங்கள் புதிய பயனராக இருந்தால் புதிதாக ஒரு கணக்கை உருவாக்குங்கள்.

ஸ்டெப் 4: கேப்ட்சா குறியீடு (captcha code) மற்றும் கார் பதிவு எண்ணை (Car Registration Number) என்டர் செய்த பிறகு "VAHAN search" என்பதைத் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: இதன் மூலம் காரின் உரிமையாளர் மற்றும் காரின் பிற விவரங்களை, நீங்கள் பெறலாம்.

பரிவஹன் இணையதளத்தில் காரின் நம்பர் பிளேட் நம்பரை என்டர் செய்து, மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றினால், கார் உரிமையாளரின் விபரங்களை விரைவாகச் சரிபார்க்கலாம். குறிப்பாக இந்த சேவை கார் தொடர்பான பல்வேறு வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ விவரங்களை உறுதிசெய்ய உதவுகிறது.

எந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கார் உரிமையாளரின் தகவல்கள் தேவைப்படும்?

Hit and run case: அதாவது காரில் வருபவர் யாரையாவது இடித்துவிட்டு வேகமாக சென்று விட்டால், அவர் மீது புகாரைப் பதிவு செய்ய, கார் உரிமையாளரின் துல்லியமான தகவல்களை வைத்திருப்பது அவசியம். அந்த சமயத்தில் மோதிய பிறகு வாகனத்தின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டால், அதனை பயன்படுத்தி உரிமையாளரின் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்குதல்: வேறொருவர் பயன்படுத்திய காரை நீங்கள் செகண்ட் ஹேண்டில் வாங்க போகிறீர்கள் என்றால், அச்சமயத்தில் அந்த காரின் உரிமையாளரை பற்றிய விவரங்களும் காரைப் பற்றிய விவரங்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போது காரின் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி நீங்கள் அவர்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+