உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் பார்முலா 'இது'தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணம் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது, குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் என முக்கிய இலக்குடன் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் உங்கள் முதலீட்டை இரட்டிப்புச் செய்ய எத்தனை வருடம் தேவைப்படும் என்பதை நீங்களே கணித்துக்கொள்ள ஒரு நிலையான பார்முலா உள்ளது. இதனால் முதலீட்டு நிறுவனங்கள் சொல்வதை நீங்கள் கண்களை மூடிக்கொண்டு நம்ப வேண்டியது இனி அவசியம் இல்லை. முதலீட்டு மற்றும் நிதியியல் சேவை நிறுவனங்கள் கூறுவது சரியா தவறா என்பதை நீங்களே எளிதாகக் கணக்கிட்டுக்கொள்ள முடியும்.

இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்தது.. என்ன காரணம் தெரியுமா..?!இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்தது.. என்ன காரணம் தெரியுமா..?!

 முதலீட்டை இரட்டிப்பாகும் பார்முலா

முதலீட்டை இரட்டிப்பாகும் பார்முலா

எந்த முதலீடாக இருந்தாலும் நாம் முதலில் பார்க்க வேண்டியது, முதலீட்டுத் திட்டம் பாதுகாப்பானதா..? என்பது தான். அதன் பின்பும் முதலீட்டுத் திட்டத்தின் வட்டி விகிதம் என்ன, இதனால் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும், எத்தனை வருடத்திற்குள் முதலீடு இரட்டிப்பாகும் என்பதைக் கணக்கிட வேண்டும்.

 விதி 72ன் எளிய கணக்கீடு

விதி 72ன் எளிய கணக்கீடு

உங்கள் முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதை எளிதாகக் கணக்கிட விதி 72 ஒன்று போதும். எவ்விதமான பெரிய கணக்கீடுகள் எதுவும் இல்லாமல் முதலீட்டுத் திட்டத்தின் வட்டி விகிதத்தை வைத்து மட்டும் வைத்து முதலீடு எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதைக் கணக்கிட முடியும்.

 முதலீட்டுத் திட்டம்
 

முதலீட்டுத் திட்டம்

உதாரணமாக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட பாதுகாப்பான முதலீடு திட்டத்திற்கு 9 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். விதி 72 பயன்படுத்திக் கணக்கிடும் போது தோராயமாக 8 வருடத்தில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.

72/ 9 (வட்டி விகிதம்) = 8 (தோராயமாக)

 

 கூட்டு வட்டி வருமானம்

கூட்டு வட்டி வருமானம்

ஆனால் இந்த விதி உங்கள் முதலீட்டுத் திட்டத்திற்குக் கிடைக்கும் வருமானம் கூட்டு வட்டி திட்டத்தில் இருந்தால் மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூட்டு வட்டி திட்டம் என்றால் காலாண்டு வாரியாகவோ, அரையாண்டு வாரியாகவோ அல்லது ஆண்டு வாரியாகவோ கிடைக்கும் வட்டி வருமானம் அதே திட்டத்தில் மறு முதலீடு செய்ய வேண்டும்.

 

 முதலீடு 3 மடங்கு அதிகரிக்க

முதலீடு 3 மடங்கு அதிகரிக்க

இதேபோல் உங்கள் 3 மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விதி 72 போலவே விதி 114-ஐ பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்திலும் உங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானம் காலாண்டு வாரியாகவோ, அரையாண்டு வாரியாகவோ அல்லது ஆண்டு வாரியாகவோ அதே திட்டத்தில் மறு முதலீடு செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to check when your money will double? Simple and effective formula

How to check when your money will double? Simple and effective formula
Story first published: Sunday, December 6, 2020, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X