கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சம்பளத்தில் எதற்கெல்லாம் Allowance எனப்படும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன .நம்முடைய சம்பளம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது , அதில் பிஎஃப் தொகை எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
பொதுவாக நிறுவனங்கள் நம் கையில் வழங்கக்கூடிய சம்பளம் தொடர்பான ஆவணத்தில் சிடிசி (CTC - Cost to Company )என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் நம்முடைய வங்கி கணக்கில் கிரெடிட் ஆகக்கூடிய சம்பளத்திற்கும், இந்த சிடிசிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இதை ஏன் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

இது தெரிந்தால் நீங்கள் அடுத்த நிறுவனத்துக்கு செல்லும் போது தெளிவாக உங்கள் ஊதியத்தை உயர்த்தி கோர முடியும். பெரும்பாலும் நிறுவனங்கள் நமக்கு வழங்கும் PaySlipஇல் எல்லா விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
அடிப்படை ஊதியம் - Basic Salary:
அதாவது ஒரு ஊழியருக்கு நிறுவனம் வழங்கக்கூடிய அடிப்படை ஊதியம் இதுதான். இந்த அடிப்படை ஊதியத்தை கணக்கீடு செய்து தான் அந்த நபருக்கான பிஎஃப் தொகை எவ்வளவு பிடித்தம் செய்வது மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு எனப்படும் HRA வழங்குவது என்பன உள்ளிட்டவை தீர்மானிக்கப்படும். இந்த அடிப்படை ஊதியத்தை கணக்கீடு செய்து தான் பிற்காலத்தில் உங்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி கணக்கீடு செய்யப்படும்.
வீட்டு வாடகை கொடுப்பனவு - House rent allowance:
ஹெச் ஆர் ஏ எனப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு. அதாவது ஒரு நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு வரி இல்லாத பணமாக இந்த வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்குகின்றன. இது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 40 முதல் 50% வரை வழங்கப்படலாம். இது நிறுவனத்தை பொறுத்தது. உங்கள் பே சிலிப்பில் இந்த பிரிவு கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
விடுமுறை பயண கொடுப்பனவு - Leave travel allowance:
சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விடுமுறை காலத்தில் வேறு இடங்களுக்கு பயணம் செய்வதற்காக வழங்கக்கூடிய கொடுப்பனவு. முறையான பயண டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினால் இந்த கொடுப்பனவை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் . முதலில் உங்களுடைய நிறுவனம் இதனை வழங்குகிறதா என்பதை உங்கள் பே சிலிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்பு கொடுப்பனவு - Special allowance:
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவை வழங்கும், சிறப்பான பணியை பாராட்டி வழங்குவது, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு தருவது ஆகியவை இந்த பிரிவில் வரும்.
மொபைல் மற்றும் இன்டர்நெட் செலவு - mobile and internet allowance :
சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய சிம்கார்டுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் சேவைகளுக்கும் மாதம்தோறும் ஒரு கணிசமான தொகையை வழங்கி விடுகின்றன. சில நிறுவனங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்களிடமே அந்த பணத்தை செலுத்தி விடுகின்றன.
உணவுக்கான கொடுப்பனவு - food allowance:
சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் அலுவலகத்தில் பணி செய்யும் நேரங்களில் வழங்கப்படும் தேநீர் உள்ளிட்ட பானங்கள் மற்றும் உணவு ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட தொகையை பிடித்துக் கொள்ளும். இது நிறுவனங்களை பொறுத்தது. சில நிறுவனங்கள் இதற்கான தொகையை பிடித்தம் செய்யும் சில நிறுவனங்கள் பிடித்தம் செய்யாது. ஆனால் அப்படி பிடித்தம் செய்தால் கட்டாயம் பே சிலிப்பில் காட்ட வேண்டும்.
கன்வேயன்ஸ் அலோவென்ஸ் - Conveyance allowance:
ஒரு ஊழியர் தன்னுடைய வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை கொடுப்பனவாக வழங்குவதை தான் இப்படி குறிப்பிடுவார்கள்.
பிஎஃப் பங்களிப்பு - EPF :
நிறுவனம் சார்பாக உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது, உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டு உங்களுடைய பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்ற விவரங்கள் இந்த பிரிவில் இடம் பெற்றிருக்கும்.
மூலத்தில் கழிக்கப்படும் வரி- Tax Deduction at source:
சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரியை பிடிக்கும் . அதனை உங்கள் பான் எண்ணுக்கு எதிராக வருமானவரித்துறையிடம் சமர்ப்பித்து விடும். நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அதனை ஆய்வு செய்து திரும்பப் பெறுவதற்கான தகுதி இருந்தால் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications