சென்னை: இன்றெல்லாம் வங்கி சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆன்லைனில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ள உங்களுக்கு பான் நம்பர் பலமுறை தேவைப்படும். ஆனால் இந்த பதிவில் பான் நம்பர் இல்லாமல் எப்படி உங்களது கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு மூன்று எழுத்து எண் ஆகும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நீங்கள் வங்கிகளில் கடன் பெற்ற விபரங்கள், நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய தேதி, முடிக்கப்பட்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன்கள் அனைத்தையும் உங்களது கிரெடிட் ஸ்கோரை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் வங்கிகளுக்கு சென்று வங்கி மேலாளரிடம், உங்களது கிரெடிட் ஸ்கோர் பற்றி கேட்டாலே அவர்கள் உங்களது மொத்த வங்கி பரிவர்த்தனையின் ஹிஸ்டரி பற்றிக் கூறி விடுவார். இந்த கிரெடிட் ஸ்கோரை வைத்து உங்களது அனைத்து வங்கி சார்ந்த விஷயங்களையும் பார்க்க முடியும். நீங்கள் வங்கிகளில் இருந்து கடன் வாங்க தகுதியுடைய நபரா? என்பதை நிர்ணயிப்பது இந்த கிரெடிட் ஸ்கோர் தான். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தர பரிசீலிக்கும். மேலும், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வங்கிகளால் வழங்கப்படும். இந்தக் கிரெடிட் ஸ்கோரை Cibil, Equifax, Experian போன்ற நிறுவனங்கள் கணக்கிடுகின்றன.

உங்களது சிபில் ஸ்கோரை பான் கார்டு இல்லாமல் ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்திற்குச் சென்று, 'பெர்சனல் சிபில் ஸ்கோர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'கெட் யுவர் ஃப்ரீ சிபில் ஸ்கோர்' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால்,பாஸ்போர்ட் , வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றில், ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, உங்கள் ஐடியின் எண்ணை கொடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் பிறந்த தேதி, பின்கோட் ஆகியவற்றை என்டர் செய்து, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். இறுதியாக உங்கள் மொபைல் எண்ணை என்டர் செய்து, 'அக்சப்ட் அண்ட் கண்டினியூ' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் அடையாளத்தை பாதுகாக்க, அடுத்த ஸ்கிரீனில், உங்கள் மொபைல் எண்ணிற்கு வழங்கப்பட்ட OTP ஐ என்டர் செய்து, 'கண்டினியூ' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் கணக்குடன், தற்போது பயன்படுத்தும் சாதனத்தை இணைக்க வேண்டுமா என்று கேட்கப்படும். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 6: இப்போது ஸ்கிரீனில் 'யூ ஹேவ் சக்ஸஸ்ஃபுலி ரெஜிஸ்டர்டு' என்ற மெசேஜ் காட்டும்.
உங்கள் CIBIL ஸ்கோரைப் பார்க்க, 'கிளிக் ஆன் டேஷ்போர்டு' என்பதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications