நம் நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் ஓய்வு காலத்திற்கான தொகையை செலுத்துகின்றன.
தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது மற்றும் நிறுவனத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் பிஎஃப் கணக்கில் இருப்பு வைக்கப்படுகிறது.

இப்படி உங்களிடமிருந்து பிடிக்கும் தொகையை உங்கள் நிறுவனம் சரியாக பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? உங்களது பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது? என்பன உள்ளிட்டவற்றை கண்டறிவது மிகவும் எளிதாகி விட்டது. அதை பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
உமாங் செயலி (UMANG App): மத்திய அரசின் உமாங் செயலி மூலம் நாம் எளிதாக பிஎஃப் கணக்கையும் அதில் உள்ள பேலன்ஸையும் கண்காணிக்க முடியும். இதற்கு முதலில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் UAN எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும். சரி தற்போது உமாங் செயலி மூலம் எப்படி பிஎஃப் பேலன்ஸை தெரிந்து கொள்வது என பார்க்கலாம்.
பிளே ஸ்டோர் வாயிலாக Umang செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
உங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்யவும்
இதனை அடுத்து "All Services" என்பதை தேர்வு செய்யவும்
பின்னர் அதில் காட்டும் பட்டியலில் "EPFO" என்பதை தேர்ந்தெடுக்கவும்
உங்களது பிஎஃப் பேலன்ஸ் குறித்த தகவலுக்கு "View Passbook" என்பதை தேர்வு செய்யவும்
இதனை அடுத்து உங்களின் UAN எண்ணை உள்ளிடவும், பின்னர் Get OTP என்பதை கிளிக் செய்யவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளவும்
இதனை அடுத்து ஸ்கீரினில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்
உங்களின் பிஎஃப் இருப்பு மற்றும் பாஸ்புக் உள்ளிட்ட அனைத்தும் தகவல்களும் கிடைத்துவிடும்.
எஸ்.எம்.எஸ்( SMS) மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்வது: பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணில் இருந்து EPFOHO என டைப் செய்து உங்களின் UAN எண்ணை டைப் செய்யவும் இதனை அடுத்து உங்களுக்கு விருப்பமான மொழியின் ஆங்கில எழுத்து முறையில் முதன் மூன்று எழுத்துக்களை உள்ளிட வேண்டும். தமிழ் மொழியில் தகவலை பெற EPFOHO UAN TAM என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உடனே உங்களின் பிஎஃப் பேலன்ஸ் மெசேஜாக உங்களுக்கு வந்து சேரும்.
மிஸ்டு கால்: பணியாளர்கள் EPFO எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தங்கள் பிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். இதை செய்ய, யுஏஎன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உடனே உங்களின் பிஎஃப் பேலன்ஸ், ஆதார் எண், பான் எண், கடைசியாக போடப்பட்ட தொகை ஆகியவை மெசேஜாக உங்களுக்கு வந்து சேரும்.
Story written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications