சென்னை: இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் சம்பளத்திற்காக வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் EPF திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் தோறும் அந்த ஊழியரும் அந்த ஊழியருக்கு வேலை வழங்கியிருக்கும் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் அந்த ஊழியரின் பெயரில் வரவு வைக்கின்றன.
பிஎஃப் கணக்கு: பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இந்த குறிப்பிட்ட ஊழியர் பணி ஓய்வு பெறும்போது ,இந்த பிஎஃப் பணமானது ஒரு மிகப்பெரிய தொகையாக வளர்ந்திருக்கும். அவர்களின் ஓய்வு காலத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய பிஎஃப் கணக்கில் நிறுவனம் உங்களுக்கான பணத்தை சரியாக பங்களிப்பு செய்கிறதா அரசின் வட்டி முறையாக வந்துள்ளதா என்பதை அறிய அவ்வப்போது பிஎஃப் பேலன்ஸை சரி பார்ப்பது நல்லது. பிஎஃப் பேலன்ஸை பார்ப்பதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

எஸ்.எம்.எஸ் : நம் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை ஒரு எஸ்எம்எஸ் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும். பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்கிறது என்றால் அந்த எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு "EPFOHO உங்களின்UANஎண் ENG" என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். இதற்கு உங்களின் UANஎண் தெரிந்திருப்பது கட்டாயம். மெசேஜ் ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ENG, தமிழில் வேண்டும் என்றால் TAM என அனுப்ப வேண்டும். உடனே உங்களின் பிஎஃப் பேலன்ஸ் ரிப்ளையாக வந்துவிடும்.
மிஸ்டு கால்: என்னுடைய UAN எண் தற்போது கைவசம் இல்லை என்பவர் எளிமையாக மிஸ்டு கால் மூலமும் பிஎஃப் பேலன்ஸை அறியலாம். இதற்கு UAN எண் தேவையே இல்லை. உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் ஒரு ரிங் உடன் கால் கட் ஆகிவிடும். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும் அதில் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் வந்துவிடும்.
Umang மொபைல் செயலி : Umang செயலி வாயிலாகவும் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கு என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். உங்கள் போனில் முதலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களுடைய UAN நம்பருடன் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் லாகின் செய்யுங்கள் அதன் பின் EPFO என்ற ஐகானை கிளிக் செய்தால் அதில் view passbook என்பதை கிளிக் செய்தால் பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து விடும். இதில் பிஎப் சம்பந்தப்பட்ட பல சேவைகளையும் நாம் பெற முடியும்.
EPFO portal: இபிஎப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். இதில் UAN எண் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்ய வேண்டும். இதனை எடுத்து அதில் Passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும், அதனை கிளிக் செய்தால் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது ,அதில் வட்டி வருமானமாக எவ்வளவு வந்திருக்கிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். இந்த அனைத்து தகவல்களுக்கும் நீங்கள் உங்களுடைய பிஎஃப் கணக்கை ஆக்டிவாகவும், கேஒய்சி அப்டேட் செய்தும் வைத்து கொள்வது நல்லது
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications