சென்னை: நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) ஒரு பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இது உங்கள் பணத்திற்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் FD திட்டங்களை வழங்குவதால், சரியான வங்கியைத் தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் சவாலாக இருக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் திறப்பதற்கான சரியான வங்கியைத் எப்படி தேர்வு செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் செய்வதற்கும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் FD-கள் மட்டுமே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. FD-களில் பல விருப்பங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா.. நீங்கள் FD கணக்கைத் திறக்கும்போது, எந்த வங்கியில் திறக்க வேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.
வட்டி விகிதங்கள்: வெவ்வேறு வங்கிகள் FD திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் மாறுபட்ட வட்டி விகிதங்கள் FD திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. பாரம்பரிய வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிற ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளில் பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கிறது. அதேபோல நீங்கள் ஒரு மூத்த குடிமக்களாக இருந்தால் இன்னும் அதிக சலுகைகளைப் பெற முடியும்.
அதிகரிக்கும் FD வட்டி விகிதங்கள்: சமீப காலமாக, FD விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில், SBI பேங்க், Axis பேங்க், பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் போன்ற சில பேங்குகள் FD வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ரெப்போ விகிதம், பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் வங்கிகள் FD விகிதங்களை மாற்றியமைக்கின்றன.
அதனடிப்படையில், 2024ஆம் ஆண்டு வரை, சில வங்கிகள் FD விகிதங்களை அதிகரித்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறந்த வருமானத்தை வழங்குகின்றன.
பேங்க் மற்றும் FD திட்டத்தின் கால அளவு: நற்பெயரைக் கொண்ட பேங்குகளைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும். சில பேங்குகள் ஓராண்டு முதல் FD திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் உங்களுக்கு விருப்பமான வங்கிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் கால அளவை மட்டுமே தேர்வு செய்யுங்கள். சான்றாக, ஒருவருக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு ஏதேனும் செலவு வர இருக்கலாம். இது போன்ற உங்கள் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு FD கால அளவைத் தேர்ந்தெடுங்கள்.
குறுகிய கால FDகள்: குறுகிய கால FDகள் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான கால அவகாசத்தில் கிடைக்கின்றன. குறுகிய காலத்திற்கு தங்கள் நிதிகளை அதிகமாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்தக் குறுகிய கால FDகள் சிறந்தத் தேர்வாக இருக்கும்.
சிறப்பு FDகள் (Special FD): சிறப்பு FDகள் என்பது குறிப்பிட்ட காலங்கள் அல்லது சந்தர்ப்பங்களுக்கு வங்கிகள் அறிமுகப்படுத்தும் நிலையான வைப்புத் திட்டங்கள் ஆகும். இவை 444 நாட்கள் அல்லது 999 நாட்கள் போன்ற குறிப்பிட்ட காலங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும். சில வங்கிகள் பண்டிகைக் காலங்களில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற சிறப்பு FD திட்டங்களை அறிமுகம் செய்கின்றன.
உங்கள் வருமானத்தை அதிகரிக்க, மேற்கண்ட அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து, அதன் பிறகு FD திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications