இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளின் விபரங்களை சேகரிக்க UDGAM - Unclaimed Deposits Gateway to Access inforMation என்னும் UDGAM தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய வங்கித் துறையில் இருக்கும் சுமார் 35000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.
இதேபோல் உரிமை கோரப்படாத ஈவுத்தொகையை திரும்ப பெற என்ன வழி. வீட்டு தலைவர்கள் தாங்கள் செய்யும் முதலீடுகள் மற்றும் சேமிப்பு குறித்து முழுமையாக வீட்டில் இருப்பவர்களிடம் வெளிப்படையாக தெரிவிப்பது இல்லை, இதனால் பல குடும்பங்களுக்கு வீட்டு தலைவர்கள் செய்த முதலீடுகள், சேமிப்புகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி ஆகியவற்றில் உரிமை கோரப்படாத தொகையை உரிய நபர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு UDGAM தளத்தை உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் உரிமைகோரப்படாத ஈவுத்தொகையை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு தளம் உள்ளது.
IEPF இணைய தளத்தின் மூலம் உங்களுடைய அல்லது உங்களுக்கு நெருக்கமானர்களின் உரிமை கோராத ஈவுத்தொகையை பெற முடியும், இது மிகவும் ஈசியாக செயல்படுத்தும் ஒரு சேவை. உரிமை கோரப்படாத ஈவுத்தொகை பெயர் அடிப்படையில் சர்ச் செய்து தெரிந்துக்கொள்ளும் எளிய வழிமுறை கொண்டு உள்ளது IEPF இணைய தளம்.
IEPF இணைய தளம் https://www.iepf.gov.in/IEPFWebProject/services.html இந்திய அரசு கட்டுப்பாட்டில் சுமார் 5685 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை கோரப்படாத ஈவுத்தொகை உள்ளது. இத்தளத்திற்கு சென்று இடதுபுறம் இருக்கும் குவிக் லிங்க்ஸ் பிரிவில் Under Investors -> Search Unclaimed and Unpaid Amounts என்பதை கிளிக் செய்யவும்.
இந்த பக்கத்தில் உங்களிடம் என்ன விபரங்கள் உள்ளதோ அதை கொடுங்கள், அனைத்து விபரங்களையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் உங்களுக்கான உரிமை கோரப்படாத ஈவுத்தொகை இருப்பின் இதை கிளைம் செய்யும் வழிமுறை நீண்ட நெடியதாக இருந்தாலும், வேகமாக நடக்கிறது. இதே வேகப்படுத்துவதாக மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications