தங்க நகைகள் திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று. காலம் காலமாக குடும்ப பாரம்பரியத்தை நிலைநாட்டும் ஒரு பொருள் என்றால் அது தங்கம் தான். நம் நாட்டில் என்னவோ பிற முதலீடுகளை விட தங்கத்திற்கென்று தனி இடம் உண்டு. இந்த அரிய விஷயத்தை பிரகாசமாகவும் எந்தவித கரையும் படியாமல் வைத்திருப்பது அவசியம். இதை செய்வதற்கு நீங்கள் நகைக்கடைகளுக்குச் சென்று சுத்தம் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. சில பொருட்களை வைத்து வீட்டிலிருந்தபடியே உங்களுடைய தங்க நகைகளை நீங்கள் சுத்தம் செய்யலாம். எந்தவித சேதமும் தங்க நகைகளுக்கு ஆகாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும்: ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் தங்க நகைகளை சேதப்படுத்தலாம். நீங்கள் எடுத்துக்கொண்ட வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் டிஷ் வாஷ் சோப்பை சேர்க்கவும். இது உங்கள் தங்க நகைகளில் மென்மையாக செயல்பட்டு அழுக்குகளை எடுக்க உதவும்.

உங்கள் நகைகளை ஊற வைக்கவும்: மேலே கூறப்பட்டுள்ளபடி ஒரு கிண்ணத்தில் டிஷ்வாஸ் லிக்விடை சேர்த்து அதில் உங்கள் தங்க நகைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும். இதன் மூலம் நகையின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகள் வெளிவரத் தொடங்கும். அதன் பின் அவற்றை சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கும். பவுடர் அதிகம் பயன்படுத்துபவர்களுடைய செயின்களிலும் பவுடரின் துகள்கள் சென்று அடைத்திருப்பதை பார்த்திருப்போம். இதுபோன்ற நபர்களும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
உங்கள் நகைகளை மெதுவாக தேய்க்கவும்: 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்த பிறகு உங்கள் நகைகளை மெதுவாக தேய்க்க பயன்படுத்திய பிரஷ் அல்லது பெயிண்ட் பிரஷ் போன்ற மென்மையான பிரஸ்டில்ஸ் கொண்ட பிரஷ்களைப் பயன்படுத்தவும். அழுக்கு தேங்கி இருக்கும் இடங்களிலும் சற்று கவனம் செலுத்தி தேய்க்கவும். பேனாக்கள், ஸ்க்ரூ டிரைவர்கள் போன்ற கடினமான பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை உங்கள் நகைகளின் மீது கீறலை ஏற்படுத்தலாம். மேலும் நகையை தேய்க்கும் போது அழுத்தமாக தேய்த்தால் அவை உங்கள் நகையை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த செயல் முறையில் மட்டும் சற்று கவனம் தேவை.
உலர்த்தவும்: நன்றாகத் தேய்த்த பின் குளிர்ந்த நீரில் உங்கள் நகைகளை நனைத்து எடுக்கவும். பின்னர் ஏதேனும் டவல் வைத்து அதை உலர வைக்கவும். இந்த எளிய முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் தங்க நகைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்ளலாம். இதே செயல்முறையை தான் பாலிஷ் போடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். தங்கம் மட்டுமன்றி வெள்ளி நகைகளுக்கும் இதே முறையை நீங்கள் பின்பற்றலாம். சிலருடைய கொலுசுகளில் அழுக்கு தேங்கி இருப்பதால் அவற்றை பாலிஷ் போட கொடுப்பது வழக்கம். கடைகளில் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக நீங்கள் மேற்கண்ட முறையை வைத்து பாலிஷ் செய்யலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications