ஆன்லைனில் பான் கார்டில் பெயர் திருத்தம்.. பிறந்த நாள் மாற்றம் செய்வது எப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு பல இடங்களில் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், அதிகளவிலான பண பரிவர்த்தனை என பல இடங்களில் பான் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பான் கார்டில் பெயர் திருத்தம், பிறந்த தேதியில் திருத்தம் எவ்வாறு செய்வது? ஆன்லைனில் எப்படி திருத்தம் செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

NSDL தளத்தில் புதிய பான் கார்டு அல்லது திருத்தம் செய்வதற்கு 96 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். (அப்ளிகேஷன் கட்டணம் 85 ரூபாய்+ சேவை கட்டணம் 12.36%)

சிறு முதலீட்டாளர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. வேதாந்த் பேஷன்ஸ் ஐபிஓ.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..! சிறு முதலீட்டாளர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. வேதாந்த் பேஷன்ஸ் ஐபிஓ.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

NSDL இணையத்தில் சென்று பெயர் திருத்தம், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.

https://www.onlineservices.nsdl.com/paam/ என்ற தளத்தில் சென்று லாகின் செய்து கொள்ளலாம்.

பின்னர் அப்ளிகேஷன் வகையின் கீழ், ஏற்கனவே உள்ள பான் தரவு / பான் கார்டின் மறுபதிப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம், ரீ ப்ரிண்ட் பான் கார்டு (ஏற்கனவே உள்ள பான் தரவில் எந்த மாற்றமும் இல்லை) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விவரங்களை பதிவிடவும்

விவரங்களை பதிவிடவும்

இதையடுத்து வகையின் கீழ், தனிநபர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்

கடைசி பெயர் / குடும்பப்பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, நீங்கள் இந்தியாவின் குடிமகனா, உங்கள் பான் எண்,எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, எங்களுக்கு தரவைச் சமர்ப்பிப்பதன் மூலமும் / அல்லது எங்கள் என்.எஸ்.டி.எல் இ-கோவ் டின் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கேப்ட்சா குறியீடு

கேப்ட்சா குறியீடு

இறுதியாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அப்ளிகேஷனை சப்மிட் செய்யவும். இதனை சப்மிட் செய்த பிறகு பேமெண்ட் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை கொடுத்த பிறகு reference number மற்றும் transaction number வரும். இதனை சேவ் செய்து Continue கொடுக்கவும்.

ஆதார் வெரிபிகேஷன்

ஆதார் வெரிபிகேஷன்

அதன்பிறகு ஆதார் கார்டின் கீழ் உள்ள authenticate என்பதை கிளிக் செய்யவும். E-KYC என்பதை தொடர்ந்து E-sign கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு Generate OTP என்பதை கொடுக்க வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்த ஓடிபியினை பதிவு செய்து க்ளிக் செய்யவும். அதன் பிறகு பிடிஎஃப் பார்மேட்டில் கிடைக்கும். இதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to correct name, date of birth online in pan card?

how to correct name, date of birth online in pan card?/ஆன்லைனில் பான் கார்டில் பெயர் திருத்தம்.. பிறந்த நாள் மாற்றம் செய்வது எப்படி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X