செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு விஷயங்கள் எளிமையாக இருக்கின்றன. குறிப்பாக போட்டோக்களை எடிட் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. தற்போது சாதாரணமான போட்டோக்களை நாம் கிப்லி ஆர்ட் (Ghibli Art)அனிமேஷன் புகைப்படமாக மாற்றுவது சாட் ஜிபிடி மூலம் மிகவும் எளிமையாகப்பட்டுள்ளது.
நாம் டிஜிட்டல் புகைப்படத்தை பகிர்ந்து கட்டளையிட்டால் போதும் அது நமக்கு அனிமேஷன் ஆர்ட்டாக அந்த போட்டோவை மாற்றி கொடுத்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது பலரும் தங்களுடைய புகைப்படங்களை இதுபோன்ற கிப்லி ஆர்ட் படங்களாக மாற்றி பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். ஜப்பானில் தான் இந்த கிப்லி ஆர்ட் என்பது பிரபலமானது. பிரபல ஜப்பானிய இயக்குனர் தான் இந்த கிபிலி ஆர்ட்டை உருவாக்கியவர்.

சிறுவயதில் விமானம் ஓட்டுவது போலவும் ஆகாயத்தில் பறப்பது போன்றும் கற்பனை கண்டு அதனை ஓவியமாக வரைந்திருக்கிறார். பின்னர் அதுவே அவரது வாழ்க்கையாக மாறியது. அப்படி 1985 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களோடு இணைந்து ஸ்டூடியோ கிப்லி என்ற அனிமேஷன் நிறுவனத்தை அவர் தொடங்கினார். கிப்லி ஆர்ட் அனிமேஷனில் திரைப்படமாகவும் எடுக்க தொடங்கினார். அந்த வகையில் தான் இந்த கிப்லி ஆர்ட் உலகம் முழுவதும் பிரபலமானது.
சாட் ஜிபிடியில் இந்த வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால் பணம் செலுத்தி பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது. ஆனால் தற்போது இலவசமாக சாட் ஜிபிடியை பயன்படுத்துபவர்களும் கிப்லி ஆர்ட்டை உருவாக்கலாம்.
சாட் ஜிபிடியை இலவசமாக பயன்படுத்து பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று கிப்லி ஆர்ட் புகைப்படங்களை மட்டுமே உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சாட் ஜிபிடி இணையதளம் அல்லது செயலிக்கு செல்ல வேண்டும்
அதில் இடது பக்கம் மூலையில் இருக்கும் '+' குறியீட்டை கிளிக் செய்து போட்டோவை அப்லோடு செய்யவும்
இதனை அடுத்து 'Ghiblify this' அல்லது 'turn this image in Studio Ghibli theme' என கமாண்ட் கொடுக்கவும்
உங்களின் படத்தை அது கிப்லி ஆர்ட்டாக மாற்றி காட்டும் பின்னர் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாட்ஜிபிடி மட்டுமில்லாமல் கூகுளின் ஜெமினி, எலான் மஸ்கின் கிராக் ஆகிய ஏஐ செயலிகளிலும் கூட நாம் புகைப்படத்தை அப்லோட் செய்து அதனை கிப்லி அனிமேஷன் ஆர்ட் படமாக மாற்ற முடியும். இருந்தாலும் இவை சாட் ஜிபிடியில் கிடைக்கும் அளவுக்கு துல்லியமாகவும் கவரக்கூடிய வகையிலும் இல்லை என பயனாளர்கள் கூறுகின்றனர்.
சாட் ஜிபிடியின் இந்த புதிய வசதியை பயன்படுத்தி உலக அரசியல் தலைவர்கள் ,பிரபலங்களின் படங்கள் கூட இப்படி கிப்லி ஆர்ட் படமாக மாற்றப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications