நம் நாட்டில் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது ஆதார் கார்டு. ஆதார் கார்டு இல்லாத எந்த செயல்முறையும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை இணைப்பதற்கு அரசாங்கம் பலமுறை காலக்கெடு விதித்தது. அதன் பின் தற்பொழுது கட்டணம் செலுத்தி இணைத்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது. அதே போல அரசின் மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற உங்கள் எல்பிஜி எரிவாயு இணைப்புடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியம்.
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உங்கள் எல்பிஜி எரிவாயு இணைப்புடன் ஆதார் கார்டை இணைத்துக் கொள்ளலாம். அரசால் வழங்கப்படும் எரிவாயு மானியத்தை பெறுவதற்காகவும், ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புகளை பெறாமல் தடுக்கவும், எரிவாயு இணைப்பு உண்மையான நபருக்கு தான் செல்கிறதா? என்பதை உறுதி செய்யவும் இந்த ஆதார் எல்பிஜி இணைப்பு அவசியமாகிறது.

ஆஃப்லைனில் எல்பிஜி கேஸ் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?: உங்கள் ஆதார் நம்பரை உங்கள் LPG எரிவாயு இணைப்புடன் இணைக்க, 2 படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கும். அவை படிவம் 1 மற்றும் படிவம் 2. இந்த 2 படிவங்களையும் உங்கள் எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் 1: LPG வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கப் பயன்படுகிறது.
படிவம் 2: உங்கள் LPG எரிவாயு இணைப்பை ஆதாருடன் இணைக்கப் பயன்படுகிறது.
இந்த 2 படிவங்களையும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது உங்கள் எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் இருந்து பெறலாம்.
எல்பிஜி கேஸ் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?:
எல்பிஜி கேஸ் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் செயல்முறை முழுமையாக ஆன்லைனில் செய்ய முடியாது. தேவையான படிவங்களை ஆன்லைனில் டவுன்லோட் செய்து அவற்றை ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம்.
ஸ்டெப் 1: முதலில் உங்கள் எல்பிஜி வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். உதாரணமாக ஹெச்பி, பாரத் கேஸ், இண்டேன் போன்ற எல்பிஜி வழங்குநரின் இணையதளங்களுக்குச் செல்லலாம்.
ஸ்டெப் 2: அதன் பின் "LPG services" என்ற பிரிவுக்குச் சென்று, "Join DBTL using Aadhaar" அல்லது "Download Forms" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: படிவம் 1 மற்றும் படிவம் 2 ஆகிய இரண்டையும் டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளவும். தேவையான ஆவணங்களுடன் படிவம் 1-ஐ உங்கள் வங்கியிலும், படிவம் 2-ஐ உங்கள் எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கவும்.
ஆதார்-எல்பிஜி இணைப்பு செயல்முறையை முடிப்பதன் மூலம், உங்கள் எல்பிஜி இணைப்புடன் அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யலாம்.


Click it and Unblock the Notifications