சென்னை: ஆதார் கார்டு இன்று அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. சில நேரங்களில் ஆதார் கார்டை எடுத்து சென்றால், அது தொலைந்து போவதற்கும் வாய்ப்புள்ளது. இன்றெல்லாம் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் உள்ளன. எனவே ஒரு ஆதார் கார்டு காபியை ஆன்லைனில் டவுன்லோட் செய்து வைப்பது நல்லது. இது மிகவும் எளிய செயல்முறையையே. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?: உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய பல வழிகள் உள்ளன. அதனை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

ஆதார் எண் மூலம் ஆதார் அட்டை பதிவிறக்கம்
உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
UIDAI இணையதளம் மூலம் ஆதார் அட்டை பெறுவது எப்படி?
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "My Aadhaar" பகுதிக்குச் சென்று, "Get Aadhaar" பிரிவின் கீழ் "Aadhaar Download" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது, உங்கள் 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: "I want a masked Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுத்து கேப்ட்சாவை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.
ஸ்டெப் 6: தற்போது OTP நம்பரை என்டர் செய்து, "Verify and Download" என்பதைக் கிளிக் செய்யவும்.
என்ரோல்மென்ட் ஐடி மூலம் ஆதார் அட்டை பெறுவது எப்படி?
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்(https://uidai.gov.in/).
ஸ்டெப் 2: "My Aadhaar" பகுதிக்குச் சென்று, "Get Aadhaar" பிரிவின் கீழ் "Aadhaar Download" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது, உங்கள் 14 இலக்க என்ரோல்மென்ட் ஐடியை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: "I want a masked Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுத்து கேப்ட்சாவை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.
ஸ்டெப் 6: தற்போது OTP நம்பரை என்டர் செய்து, "Download your e-aadhar card" என்பதைக் கிளிக் செய்யவும்.
விர்ச்சுவல் ஐடி மூலம் ஆதார் அட்டை பெறுவது எப்படி?
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்(https://uidai.gov.in/).
ஸ்டெப் 2: "My Aadhaar" பகுதிக்குச் சென்று, "Get Aadhaar" பிரிவின் கீழ் "Aadhaar Download" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது, உங்கள் 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: "I want a masked Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுத்து கேப்ட்சாவை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.
ஸ்டெப் 6: தற்போது OTP நம்பரை என்டர் செய்து, "Download Aadhaar" என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும், டவுன்லோட் செய்யப்பட்ட ஆதார் கார்டை திறந்து பார்க்க உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரில் என்டர் செய்து உங்களுடைய பிறந்த ஆண்டை என்டர் செய்ய வேண்டும். இதுவே உங்களுடைய பாஸ்வேர்ட் ஆகும்.

Click it and Unblock the Notifications