சென்னை: இந்தியாவில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டுமே முக்கியமான அடையாள ஆவணங்களாக மாறிவிட்டன. பெரும்பாலான சேவைகளுக்கு நம்முடைய அடையாள ஆவணங்களாக இவை கேட்கப்படுகின்றன. ஆனால் எல்லா இடத்திற்கும் நாம் இவற்றை கொண்டு செல்ல முடியாது.
ஒரு வேளை உங்களுடைய பான் கார்டு அல்லது ஆதார் கார்டை கொண்டு செல்ல மறந்து விட்டீர்கள், ஆனால் உங்களுக்கு அவசரமாக அவை தேவைப்படுகிறது எனும் போது அவற்றை எளிதாக நீங்கள் வாட்ஸ் அப்பிலேயே டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. அது எப்படி என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

1. முதலில் உங்கள் போனில் வாட்ஸ் அப்பை ஓபன் செய்ய வேண்டும்.
2. பின்னர் +91 9013151515 என்ற எண்ணுக்கு 'Hi' என மெசேஜ் அனுப்ப வேண்டும்.
3. இது மத்திய அரசின் மை கவர்மெண்ட் ஹெல்ப் டெஸ்க் ஆகும். இதில் சாட் பாட் வழியில் உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்.
4. உடனே உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும், அதில் இரண்டு வாய்ப்புகள் காட்டும். DigiLocker அல்லது CoWIN services என்பது காட்டும் அதில் DigiLocker என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. இதனை அடுத்து உங்களிடம் DigiLocker அக்கவுண்ட் இருக்கிறதா என கேட்கும். அதில் ஆம் அல்லது இல்லை என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும்.
6. இதனை அடுத்து உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
7. பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
8. அந்த ஓடிபி உள்ளீடு செய்தால் உங்கள் DigiLockerஇல் என்னென்ன ஆவணங்களை இணைத்துள்ளீர்கள் என்பது காண்பிக்கும்.
9. அதில் உங்களுக்கு ஆதார் கார்டு அல்லது பான் கார்டு என எது தேவையோ அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
10. பிடிஎஃப் வடிவத்தில் ஆவணமானது டவுன்லோட் ஆகிவிடும், அதை எங்கு வேண்டுமோ நாம் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
DigiLocker செயலி மூலம் நாம் நம்முடைய முக்கிய ஆவணங்களை சேமித்து வைத்து கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நம்முடைய ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மதிப்பெண் சான்றிதழ்கள், டிரான்ஸ்பர் சர்டிபிகேட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமித்து கொண்டால் நமக்கு தேவைபப்டும் போது எளிதாக எடுத்து பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications