இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணமாக நாம் ஆதார் கார்டை பயன்படுத்துகிறோம் . இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ தான் ஆதார் கார்டு தொடர்பான அனைத்தையுமே மேலாண்மை செய்து வருகிறது.
சிம்கார்டு வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு ஆதார் கார்டை அவசியம் கேட்கிறார்கள், அதேபோல ஒரு அரசு நல திட்டத்திற்கு நீங்கள் பதிவு செய்கிறீர்கள் என்றாலும் கூட அதில் ஆதார் அட்டை கட்டாயமாக கேட்கப்படுகிறது. ஆதார் கார்டு ஹார்ட் காப்பியாக கையில் அட்டையாக வாங்கி வைத்து கொள்ளலாம் அல்லது நம்முடைய போனில் புகைப்படமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பிடிஎஃப் முறையில் ஆதார் கார்டை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது எம்ஆதார் செயலி வாயிலாக நாம் டிஜிட்டல் காப்பியாகவும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதைத் தாண்டி ஒரு எளிமையான நடைமுறை இருக்கிறது . ஆதாரை நாம் whatsapp வாயிலாகவே எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம் .
திடீரென நமக்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது அப்போது உங்களிடம் ஆதார் கார்டு இல்லை என்ற சமயத்தில் உடனே இந்த முறையை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அனைத்து மக்களும் தங்களுடைய ஆதார் கார்டை வாட்ஸப் வாயிலாகவே எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை கொண்டு வந்திருக்கிறது யுஐடிஏஐ. எனவே ஆதார் கார்டு வேண்டும் என்பதற்காக நீங்கள் எம்ஆதார் செயலிக்கோ அல்லது யுஐடிஏஐ இணையதளத்திற்கோ செல்ல வேண்டிய தேவையில்லை.
ஆதார் கார்டை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியம் . முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் எண் உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும் . அடுத்ததாக உங்களுக்கு என Active digi locker கணக்கு இருக்க வேண்டும் . இது இருந்தால் ஒரு நிமிடத்தில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
+91-9013151515என்ற இந்த எண் மத்திய அரசின் MyGov Helpdesk எண். இதனை உங்கள் போனில் சேவ் செய்து கொள்ளுங்கள். இதனை அடுத்து வாட்ஸ் அப் சென்று இந்த எண்ணை கிளிக் செய்ய வேண்டும். இதில் அரசின் அனைத்து சேவைகளும் பட்டியலாக காட்டும் , அதில் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும் . உடனே உங்களுக்கு டிஜி லாக்கர் கணக்கு இருக்கிறதா இல்லையா என்பதை கேட்கும். அதற்கு ஆம் என பதில் அளிக்க வேண்டும் .
பின்னர் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் இதனை அடுத்து உங்களுடைய பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி-ஐ உள்ளீடு செய்ய வேண்டும் ., உடனே உங்கள் டிஜி லாக்கர் கணக்கில் இருந்து ஆதாரை வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் வடிவில் கொண்டு வந்து விடும். இதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications