இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டு, இன்று அனைத்து அரசு சம்பந்தமான, அரசு சாரா சேவைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இது 12 இலக்க எண் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இந்த அட்டை UIDAI வழங்கி வருகின்றது.
அரசு அனைத்து விதமான சேவைகளிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை புகுத்தி வரும் நிலையில், ஆதாரிலும் பல நுட்பங்களை புகுத்தி வருகின்றது.
ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்
ஆரம்பத்தில் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் என்றாலே ஆதார் மையங்களை தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. ஆன்லைனிலேயே பல சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் விஷயம் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல் எப்படி ஆதாரினை டவுன்லோட் செய்வது? என்பதை தான்.
UID/VID பதிவிடுங்கள்
இதற்காக அரசின் இணைதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
அதில் My Aadhaar என்ற ஆப்சனுக்குள் செல்லுங்கள். அதில் Order Aadhaar Reprint என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் ஆதார் எண் (UID), பதிவு ஐடி (ஈஐடி) மற்றும் விர்ச்சுவல் ஐடி (VID) ஆகியவற்றில் எது உங்களிடம் உள்ளதோ அதை பதிவு செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால்?
தேவையான விவரங்களை கொடுத்த பிறகு, Send OTP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, UIDAI தரப்பிலிருந்து, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
அதன் பிறகு இந்த OTP- எண்ணினை பதிவு செய்ய வேண்டும். OTPஐ பதிவு செய்த பிறகு, Verify and Download என்பதைக் கிளிக் செய்யவும்.
மேற்கண்ட அப்டேட் களுக்கு பிறகு டிஜிட்டல் ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில்?
ஒரு வேளை உங்களிடம் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லை. மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை எனில், My Mobile number is not registered என்ற ஆபசனை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு கையிலிருக்கும் ஏதேனும் ஒரு மொபைல் எண்ணினை பதிவு செய்யவும். அதன் பிறகு ஓடிபி என்ற ஆப்சனை கிளிக் செய்து, Send OTP கொடுக்கவும்.
அதற்கு கீழாக இருக்கும் டெர்ம்ஸ் & கண்டிசன் பாக்ஸினை க்ளிக் செய்து கொடுக்கவும். அதன் பிறகு சப்மிட் கொடுக்கவும்.
நீங்கள் ஸ்க்ரீனில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி அல்லது TOTP என்ற எண் வரும். அதனை கொடுத்து அப்டேட் செய்யவும்.
அதன் பிறகு ரீபிரிண்ட் ஆப்சன் வரும்.
போஸ்டலில் வரும்
அதோடு பேமெண்ட் ஆப்சனும் வரும். அதில் பேமெண்டினை செலுத்திய பிறகு, டிஜிட்டல் கையெழுத்து கேட்டும். அதனை பதிவு செய்த பிறகு, ரீபிரிண்ட் செய்து கொள்ளலாம்.
உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SRN எண் வரும். அதன்பிறகு தபாலில் உங்களுக்கு ஆதார் கார்டும் வரும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications