இந்தியாவில் முக்கியமான ஆவணங்கள் என்றால் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகிய இரண்டும் தான். இவை இரண்டும் இல்லாத சேவைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு, ITR தாக்கல் செய்வதற்கு மற்றும் இதர அரசாங்க திட்டங்களில் பலன் பெறுவதற்கு என பலவற்றுக்கும் இந்த இரண்டு ஆவணங்கள் முதன்மை ஆவணங்களாக தேவைப்படுகிறது. எனவே தேவைப்படும் இடங்களுக்கு எல்லாம் கையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை எடுத்துச் செல்ல முடியாது. அதற்காகத்தான் இவற்றை ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் சேவையை அரசு வழங்குகிறது.
ஆன்லைனில் இந்த ஆவணங்களை டவுன்லோட் செய்ய முடியும் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பிலும் உங்களால் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை டவுன்லோட் செய்ய முடியும் என்பது தெரியுமா? இந்தப் பதிவில் அது குறித்து பார்ப்போம்.

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது எப்படி?: அதற்கு முதலில் "My Gov" வாட்ஸ்ஆப் ஹெல்ப்லைன் நம்பரை மொபைலில் "சேவ்" செய்ய வேண்டும். உங்கள் போனின் டயலர் அப்ளிகேஷனுக்கு சென்று "9013151515" என்ற நம்பரை "My Gov" அல்லது "DigiLocker" என்ற பெயரில் சேவ் செய்யவும். அதன் பின் வாட்ஸ் அப்பில் இந்த நம்பரை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
பின்பு சேவ் செய்யப்பட்ட நம்பருக்கு "Hi" என்று மெசேஜ் அனுப்பவும். நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடன் நமஸ்தே என்று தொடங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்படும். அந்த மெசேஜின் இறுதியில் 2 சர்வீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று "Cowin services" மற்றொன்று "DigiLocker services"
அதில் "DigiLocker services" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்களிடம் DigiLocker கணக்கு இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை தேர்வு செய்யுங்கள்.
மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும். உங்களிடம் DigiLocker கணக்கு இருந்தாலும் இந்த ஸ்டெப்ஸ்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
உங்கள் மொபைல் நம்பருக்கு பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும். அதன் பிறகு நீங்கள் டிஜிலாக்கரில் சேமித்த ஆவணங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஆதார் கார்டு, பான் கார்டு, மார்க் சீட், லைசென்ஸ் போன்ற அனைத்து ஆவணங்களையும் டவுன்லோட் செய்யலாம். டிஜிலாக்கர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சாட்பாட் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சம் உங்களுக்கு தேவையில்லை.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்தையும் டிஜிட்டல் மையமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது போன்ற அம்சங்கள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வதற்கான இணையதளங்களுக்கு சென்று லாகின் செய்து, அதன் பின் டவுன்லோட் செய்வதற்கு பதிலாக எளிதில் நான்கு ஐந்து கிளிக்குகள் மூலம் எளிதில் டவுன்லோட் செய்யலாம். இது வயதானவர்களுக்கும் உதவிகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications