பான் கார்டு தொலைந்து விட்டதா.. நிமிடங்களில் e- Pan Card டவுன்லோட் செய்வது எப்படி?

வருமான வரி தாக்கலில் முக்கிய ஆவணமாக இருக்கும் பான் கார்டு, இந்தியாவில் முக்கிய அடையாள அட்டையாகவும் உள்ளது.

இது தவிர வங்கி பணப்பரிவர்த்தனை, டெபிட் கார்டு மற்றும் கிரெடுட் கார்டு பெறுவதற்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது.

இத்தகைய பல முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணமான பான் கார்டு, தொலைந்து விட்டால் என்ன செய்வது? உடனடியாக எப்படி பெறுவது? வாருங்கள் பார்க்கலாம்.

தொலைந்து விட்டால்

தொலைந்து விட்டால்


முன்பெல்லாம் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து விட்டால், அதற்காக நீங்கள் மாத கணக்கில் நடையாய் நடக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தாலும் எளிதில் கிடைத்து விடாது.

ஆனால் இன்று அப்படியில்லை இருந்த இடத்தில் இருந்து கொண்டே, ஆன்லைன் டவுன்லோட் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எப்படி டவுன்லோட் செய்வது?

எப்படி டவுன்லோட் செய்வது?


வாடிக்கையாளர்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும்.

அதில் கீழாக உள்ள our services என்ற ஆப்சனின் கீழ், instant E-PAN என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இதற்கு முன்பாக நீங்கள் e-pan டவுன்லோடு செய்யவில்லை எனில், get new e-pan என்பதை கிளிக் செய்யவும்.

ஆதார் எண் தேவை

ஆதார் எண் தேவை


e-pan டவுன்லோட் செய்யும் முன்னர், check status என்பதன் கீழ் உள்ள download pan என்பதை கிளிக் கொடுத்து continue என்பதை கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணினை கேட்கும். அதனை கொடுத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னர் continue என்பதை கிளிக் செய்யவும்.

ஓடிபி வெரிபிகேஷன்

ஓடிபி வெரிபிகேஷன்

அதன் பிறகு உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். ஒடிபியை கொடுத்து கிளிக் செய்வதற்கு முன்னர், உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? குறிப்பாக இ-மெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது e-pan என்பது உங்களது மெயில் ஐடிக்கு வரும். அதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

மற்றொரு முறை

மற்றொரு முறை

மற்றொரு முறையில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற தளத்திற்கு செல்லவும்.

அங்கு பான் எண்( Only for individual), பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவிடவும். இதன் மூலம் எளிதில் பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இதில் Acknowledgement number கொடுத்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் பிறந்த தேதி, கேப்ட்சா எழுத்தினை கொடுக்கவும். இதனை கொடுத்தும் உங்களது பான் கார்டினை பிடிஎஃப் வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+