டிஜிட்டல் பான் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்லைனில் உங்களது இ பான் கார்டைப் பெறுவது மிகவும் எளிதான மற்றும் சிறப்பான வழியாகும். இ பான் கார்டு என்பது வருவாய்த்துறை அளிக்கும் பான் கார்டின் டிஜிட்டல் வடிவமாகும். யூடிஐஐடிஎஸ்எல் -UTIITSL இப்போது பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது இ பான் கார்டை தங்களது இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்யும் வசதியைச் செய்துள்ளது.

இ பான் கார்டைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றவும்:
-புதிய பான் பெறுவதற்காக விண்ணப்பித்த தனிப்பட்ட நபர்கள் அல்லது ஒரு திருத்தம் செய்ய அண்மையில் விண்ணப்பித்தவர்கள் அல்லது யூடிஐஐடிஎஸ்எல் மூலம் திருத்தம் செய்தவர்கள்
- வருவாய்துறையில் பான் கார்டுடன் தங்களது மொபைல் எண் அல்லது இமெயில் முகவரியை பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்.

டிஜிட்டல் பான் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

மேற்கண்டவர்கள் இ பான் கார்டை பிடிஎப் வடிவில் யூடிஐஐடிஎஸ்எல் இணையதளத்தில் இருந்து நேரடியாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த இலவச சேவை இ பான் வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் அல்லது புதிய பான் விண்ணப்பம் அல்லது மாற்றம் அல்லது திருத்தம் செய்ய விண்ணப்பம் உள்ளவர்களுக்குப் பொருந்தும்.

இருப்பினும் கடந்த முறை இ பான் வழங்கப்பட்டவர்கள் ஒரு மாதம் கடந்து விண்ணப்பித்தால் அவர்கள் ஆன்லைன் கட்டணமாக ரூ.8.26 செலுத்த வேண்டும். இதற்கு பிந்தைய டவுன்லோடுக்கும் இதே கட்டணம் செலுத்த வேண்டும்.

மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்;
டவுண்லோடு லிங்க் பயனரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த லிங்க்கை கிளிக் செய்தால் பயனர்கள் இ பான் கார்டை டவுண்லோடு செய்யலாம். இதற்கு அவர்களது மொபைல் எண் அல்லது இ முகவரிக்கு அனுப்பப்படும் ஓடிபியை பயன்படுத்த வேண்டும்.

- ஒருவேளை பயனரின் மொபைல் எண் அல்லது இ முகவரி பதிவு செய்யப்படாமல் இருந்தால் அதை மாற்றம் அல்லது திருத்தம் கோரி முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வழிமுறை இ பான் கார்டை எதிர்காலத்தில் டவுண்லோடு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

- வழங்கப்பட்ட லிங்க்கில் ஒவ்வொரு பயனர்களும் அதிகபட்சம் மூன்றுமுறை தங்களது இ பான் கார்டை டவுண்லோடு செய்யலாம்.
இந்த லிங்க் ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும். இந்தச் சேவைக்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது.

என்எஸ்டிஎல் வெப்சைட்டில் இருந்து இ பான் கார்டை டவுண்லோடு செய்ய படிப்படியான முறைகள்:
Download e-PAN card என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இது 30 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பான் கார்டுக்கு மட்டுமே செல்லும்.
இதைத் தொடர்ந்து கீழ்கண்ட விவரங்களை நீங்கள் தரக்கோரப்படும்:

- பான் எண்
-மாதம் மற்றும் பிறந்த ஆண்டு
-இந்த விவரங்களை என்டர் செய்தபின் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- 'Submit பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களது இ பான் கார்டு டவுன்லோடு செய்வதற்கு தயாராகிவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+