தமிழகத்தில் உள்ள 234 சட்டபேரவை தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கப்படவுள்ளது. பலமான போட்டிகளுக்கு மத்தியில் நாளை இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதமே இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்தது.
இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இதனை எடிட் செய்ய முடியாது. அதோடு நீங்கள் பயன்படுத்தும் மொபைலில் கூட சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அரசின் டிஜி லாக்கர் ஆப்பில் பதிவேற்றம் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.
இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/ என்ற இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது EPIC நம்பரை கொடுத்து கிளிக் செய்யவும்.
ஏப்படி டவுன்லோடு செய்வது?
அதன்பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு ஒன்று வரும். அந்த ஓடிபியை பதிவு செய்து பிறகு, டவுன்லோடு EPIC என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை வாக்காளர் அடையாள அட்டைக்கு மொபைல் நம்பர் கொடுக்க வில்லை என்றாலோ அல்லது வேறு நம்பரை கொடுத்திருந்தாலோ, கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்த பிறகு தான், நீங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும்.
மொபைலிலும் டவுன் லோடு செய்யலாம்
இதனை உங்களது ஸ்மார்ட்போன் மூலமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதற்காக நீங்கள் digital voter id vard download and guide என்ற ஆப்பினை டவுன்லோடு செய்தும் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். எப்படி இருப்பினும் உங்களது கே ஒய்சி விவரங்களை அப்டேட் செய்த பிறகே டவுன்லோடு செய்ய முடியும்.
மிக நல்ல விஷயம்
முதன் முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்த்து விட்டு, அடையாள அட்டைக்காக காத்திருப்பவர்களுக்கு இது மிக நல்ல விஷயம். ஏனெனில் வாக்காளர் அடையாள அட்டை இன்னும் கைக்கு கிடைக்கவில்லை? அப்படி இருக்கும்பட்சத்தில் எப்படி வாக்களிப்பது என யோசிப்பவர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான். எனினும் இந்த முறையில் தற்போதைக்கு நவம்பர் 2020க்கு பிறகு பதிவு செய்தவர்கள் தான் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications