டெல்லி: இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான பணிகளை சம்பளதாரர்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். அண்மையில் தான் வருமானவரித்துறை ஆன்லைனில் ஐடிஆர் படிவங்களையும் வெளியிட்டது. இந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மிக முக்கியமான ஒரு ஆவணமாக பார்க்கப்படுகிறது Form 16 எனப்படும் படிவம் 16.
ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு அந்த நிறுவனம் படிவம் 16ஐ வழங்கும். அதில் அந்த ஆண்டில் அந்த நிறுவனம் அந்த ஊழியருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கியிருக்கிறது, அதில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அதேபோல ஃப்ரீலேன்சர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் அவர்களின் சேவைக்காக ஊதியம் வழங்கக்கூடிய நிறுவனங்கள் சம்பளத்தில் 10% தொகையை டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்திருக்கும். அந்த தொகையை கோரவும் படிவம் 16 என்பது தேவைப்படுகிறது.

தற்போது படிவம் 16ஐ எளிதாக ஆன்லைன் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வருமான வரித்துறை வழி வகையை செய்திருக்கிறது. டிஜிட்டல் முறையில் இந்த படிவத்தை பெறுவதற்கு https://www.tdscpc.gov.in. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் TAN (Tax Deduction Account Number) எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்சா குறியீடு உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும். லாகின் செய்தவுடன் டவுன்லோட்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் படிவம் 16 என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த நிதி ஆண்டு என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் வருமான வரி கணக்கு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் படிவம் 16ஐ வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. நிறுவனங்களுக்கு இதனை பதிவிறக்கம் செய்து ஊழியர்களுக்கு வழங்குவது என்பது எளிதாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக படிவம் 16 என்பது இரண்டு பாகங்களை கொண்டதாக இருக்கும். பகுதி ஏ மற்றும் பகுதி பி என இரண்டு பிரிவுகளில் விவரங்கள் இருக்கும். பகுதி ஏ-வில் ஊழியரின் விவரங்கள், நிறுவனத்தின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதே போல எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டது எவ்வளவு வருமான வரித்துறையிடம் டெபாசிட் செய்யப்பட்டது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். பகுதி பி-இல் ஊழியரின் ஊதியம் , வரி விலக்குகள், எவ்வளவு வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரிவாக இடம்பெற்றிருக்கும்.
படிவம் 16ஐ பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு ஊழியரின் பான் எண், பெயர் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே படிவம் 16ஐ ஊழியர்களுக்கு தந்துவிட வேண்டும். இதனை அடுத்து நாம் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யலாம். படிவம் 16இல் அனைத்து தகவல்களும் இருக்கும் என்பதால் அதனை பதிவேற்றம் செய்தாலே போதும், வருமானவரித்துறை இணையதளம் நமக்கான விவரங்களை தானாகவே பூர்த்தி செய்து திரையில் காண்பிக்கும். இதனை அடுத்து விவரங்களை சரி பார்த்து ஆதார் அங்கீகார சரிபார்ப்பினை முடித்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications