நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ (SBI) தனது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளித்துள்ளது எனலாம்.
ஏனெனில் அதன் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டுக் கடன் வட்டி சான்றிதழை (Home Loan Interest Certificate) வீட்டிலிருந்து பெரும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சில எளிய முறைகளில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
வீட்டு கடன் வட்டி சான்றிதழ்
வருமான வரியின் கீழ் வீட்டுக் கடன் வட்டிக்கு தள்ளுபடியைக் கோர வீட்டு கடன் வட்டி சான்றிதழ் மிகவும் அவசியமாகும். ஆக வாடிக்கையாளர்கள் இந்த சான்றிதழை பெற முன்னர் வங்கி கிளைகளுக்கு சென்று அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை இருந்த இடத்தில் இருந்தே எளிதில் ஆன்லைன் மூலமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பர்சனல் பேங்கிங்கினை லாகின் செய்யுங்கள்
இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற இனையதளத்தில் சென்று, உங்களது இணைய வங்கியைப் பயன்படுத்தி வீட்டுக் கடன் வட்டி சான்றிதழை பெறலாம். இதற்காக வாடிக்கையாளர் பர்சனல் பேங்கினை க்ளிக் செய்து லாகின் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் உள்ள Home Loan Int.Cert (Prov) என் ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிடிஎஃப் பார்மேட்டில் டவுன்லோடு செய்யலாம்
அதன் பிறகு எந்த கணக்கிற்கு வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் வேண்டும் என்பதை கொடுக்க வேண்டும். ஆன்லைனில் இருக்கும் உங்களது வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் உங்கள் முன் திரையில் தோன்றும். இந்த சான்றிதழின் PDF-ஐ நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது பிரிண்ட் அவுட்டும் செய்து கொள்ளலாம்.
வேறு ஆப்சன் மூலமாக டவுன்லோடு
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ Quick மூலமாகவும் இந்த சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எஸ்பிஐ இன்றைய காலக்கட்டத்தில் பல சேவைகளையும் ஆன்லைன் வழியாகவே பெற்றுக் கொள்ளும் வகையில் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் மணிக் கணக்கில் வங்கிகளில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.


Click it and Unblock the Notifications