டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணத்தில் வங்கி பரிவர்த்தனைகள் கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒவ்வொரு வங்கிகளும் தங்களுக்கென்று தனி இணையதளங்களை பராமரித்து வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் (IPPB) பாஸ்புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே தங்கள் பாஸ்புக்கை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி உங்கள் IPPB பேங்கின் பாஸ்புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

IPPB பாஸ்புக்கை டவுன்லோட் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்முறை: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து IPPB பேங்க்-இன் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அப்ளிகேஷனை திறந்து இன்ஸ்டால் செய்த பிறகு, புதிதாக உள்நுழைபவர்களாக இருந்தால் உங்களுடைய அக்கவுண்ட் நம்பர், வாடிக்கையாளர் ஐடி மற்றும் பிறந்த தேதியை வழங்கி ரெஜிஸ்டர் செய்யவும். பதிவு செய்ததும் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய பாஸ்புக்கை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
IPPB பாஸ்புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: IPPB மொபைல் அப்ளிகேஷனில் உங்களுடைய லாகின் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையுங்கள்.
ஸ்டெப் 2: உள்நுழைந்த பிறகு பல்வேறு சேவை விருப்பங்கள் காண்பிக்கப்படும். அதில் டாஷ்போர்ட் பகுதிக்குச் செல்லுங்கள்.
ஸ்டெப் 3: "பாஸ்புக்" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யுங்கள். நீங்கள் எந்த தேதியில் இருந்து பரிவர்த்தனையை பார்க்க விரும்புகிறீர்களோ? அந்த தேதியை தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெப் 4: டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால் பாஸ்புக் PDF வடிவில் டவுன்லோட் செய்யப்படும். உங்களுடைய டிவைஸில் பாஸ்புக்கை சேமித்து பார்த்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பாஸ்புக்கின் நன்மைகள்: வங்கிக்கு செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் பேஸ்புக்கை டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளலாம். சில நிமிடங்களில் அறிக்கையை பார்க்க முடியும். இதற்கு வங்கிக்குச் சென்று பாஸ்புக் என்ட்ரி போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
தற்போது வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அதிகரித்துவிட்டன. அவ்வப்போது வங்கி அறிக்கைகளை இது போன்ற டிஜிட்டல் பாஸ்புக்-இன் உதவியுடன் பார்ப்பது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications