யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) வருகையின் காரணமாக பணப் பரிவர்த்தனைகள் தற்போது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இந்த UPI சேவையின் காரணமாக பயணர்கள் பணத்தை அனுப்பவும், பெறவும், தங்களுடைய பில்களை செலுத்தவும், பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடிகிறது. இந்த வசதி இருந்தபோதிலும் சில நேரங்களில் சர்வர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொள்ள கூடும். இந்த சிக்கல்களைத் தவிர்க்க UPI புகாரை பதிவு செய்யும் செயல்முறைகள் உள்ளன. அந்த செயல்முறைகளை UPI பயன்படுத்தும் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
UPI பயன்படுத்தும் போது பல்வேறு வகையான பிரச்சனைகளை பயனர்கள் சந்திக்க நேரிடலாம்.

UPI PIN பிரச்சனைகள்: UPI PIN தொடர்பான பிரச்சனைகள், பிழைகள் போன்றவை பரிவர்த்தனையை முடிக்க தடையாக இருக்கும்.
ப்ராசசிங் பிரச்சனைகள்: பணம் பிடித்தம் செய்யப்பட்டு பரிவர்த்தனை முடிவடையாமல் போதல், தவறான கணக்கிற்கு பணம் சென்றடைதல், நிலுவையில் உள்ள அல்லது நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள், பரிவர்த்தனை வரம்பை மீறுதல், பரிவர்த்தனை காலாவதியாதல் போன்றவை இதில் அடங்கும்.
பேங்க் அக்கவுண்ட் பிரச்சனைகள்: பேங்க் அக்கவுண்ட் விவரங்களை இணைத்தல் அல்லது மாற்றுதல் அல்லது நீக்குதல், பதிவிறக்கம் செய்தல் போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படலாம்.
மற்ற பிரச்சனைகள்: UPI அப்ளிகேஷனில் உள்நுழைவதில் தவறுகள், பதிவு பிரச்சனைகள், OTP பிழைகள் போன்றவை இதில் அடங்கும்.
UPI பரிவர்த்தனை தோல்வியுற்றால் புகாரளிப்பது எப்படி?: UPI பரிவர்த்தனையின் போது நீங்கள் சிக்கலை எதிர்கொண்டால், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) புகார் செய்யலாம். சில நேரங்களில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும், ஆனால் குறிப்பிட்ட நபருடைய அக்கவுண்ட்டிற்கு பணம் சென்று இருக்காது. இதுபோல் UPI பரிவர்த்தனை தோல்வியுற்றால், புகாரளிக்க கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: NPCI இணையதளத்திற்குச் சென்று, "What we do" என்ற மெனுவிற்குச் செல்லவும். அதன் பின் "UPI" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 2: "UPI" பிரிவின் கீழ் "Dispute Redressal Mechanism" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: "Complaint" பிரிவின் கீழ் "Transaction" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: உங்கள் புகாரின்படி "Nature of the transaction" என்ன என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: "Transaction failed but amount debited" என சிக்கலைத் தேர்ந்தெடுத்து, உங்கள் UPI பிரச்சனையின் சுருக்கமான விளக்கத்தை வழங்கவும்.
ஸ்டெப் 6: பரிவர்த்தனை ஐடி, வங்கியின் பெயர், UPI ஐடி, தொகை, பரிவர்த்தனை தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை வழங்கவும் மற்றும் உங்கள் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கு அறிக்கையின் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
செயல்முறையை எளிதாக்க அனைத்து விவரங்களும் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யவும்.
இந்தப் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம், UPI பரிவர்த்தனைச் சிக்கல்களைத் திறம்படச் சமாளிக்கவும் தீர்க்கவும் முடியும், எதிர்காலத்தில் பாதுகாப்பான பரிவர்த்தனைகளையும் உறுதி செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications