வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யக்கூடிய காலம் இது. வழக்கமாக ஜூலை 31ஆம் தேதிக்குள் தனிநபர்கள் வருமானக் வரி கணக்கினை தாக்கல் செய்துவிட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு வருமான வரித்துறை செப்டம்பர் 15ஆம் தேதி வரை வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான அவகாசமாக வழங்கி இருக்கிறது .
சிக்கலான வருமானங்கள் எதுவும் இல்லை , எளிமையான வருமானம் தான் இருக்கிறது எனவே நானே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்து கொள்ள போகிறேன் என்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம் . ஸ்கைமேன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவன தலைவர் ராஜேஷ் தாங்களாகவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் என்ன சரிபார்க்க வேண்டும் என்பதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று பான் என்னை உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும். முக்கியமான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் நீங்கள் நிறுவனங்களின் வேலை செய்யும் நபராக இருந்தால் உங்களுடைய படிவம் 16 , ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
தாங்களாகவே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள்கள் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும் என ராஜேஷ் கூறுகிறார். அதாவது உங்களுடைய Gross income என்பது நான்கு இடங்களிள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என கூறுகிறார். குறிப்பிட்ட நான்கு இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே உங்களுடைய வருமான வரி கணக்கு சரியாக இருக்கிறது என அர்த்தம் என்கிறார்.
முதலில் 26AS - இதனை ஆண்டு தகவல் அறிக்கை என அழைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உங்களுடைய அனைத்து விதமான நிதி நடவடிக்கைகளும் உள்ளடக்கிய ஒரு ஆவணம் தான். இதில் உங்களின் டிடிஎஸ் பிடித்தம், டிசிஎஸ் உள்ளிட்ட வரி விவரங்களும் முழுமையாக இருக்கும்.
இரண்டாவதாக AIS - இது நாம் மேலே கூறிய 26AS இன் விரிவான வடிவம். இந்த படிவத்தில் உங்களுடைய வருமானம் ,வரி , முதலீடு , அந்த முதலீட்டின் மூலம் உங்களுக்கு கிடைத்த ஈத்வு தொகை , லாபம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். இதில் உங்களின் வருமானம் எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக ஆன்லைனில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது டிடிஎஸ் பிரிவில் (TDS Section) உங்களுடைய வருமானம் எவ்வளவு இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஆண்டு தகவல் அறிக்கையில் உள்ள வருமானமும் இதில் காட்டும் வருமானமும் பொருந்த வேண்டும்.
அடுத்ததாக இன்கம் என்ற பிரிவில் (Income Section) உங்களுடைய நிகர வருமானம் எவ்வளவு இருக்கிறது என பார்க்க வேண்டும். மேலே கூறிய இந்த நான்கு இடங்களிலும் உங்களுடைய வருமானம் ஒரே எண்ணாக இருந்தால் நீங்களாகவே உங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்துவிடலாம் . அப்படி இல்லை இந்த நான்கிலும் இருக்கக்கூடிய வருமானம் குறித்த விவரங்கள் வித்தியாசமாக இருக்கிறது என்றால் 26AS என்ன வருமானம் காட்டுகிறதோ அந்த வருமானத் தொகையை மற்ற மூன்று இடங்களிலும் நிரப்ப வேண்டும் என ராஜேஷ் கூறுகிறார். இந்த வித்தியாசம் பெரும்பாலும் 10 ரூபாய்க்குள் தான் இருக்கும் என தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications