நம் நாட்டில் மிக முக்கியமான அரசாங்க ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. ஆனால் ஆதார் கார்டு தொடர்புடைய மோசடிகள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் எல்லா இடங்களிலும் ஆதார் கார்டை வழங்க முடியாது. இதன் காரணமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் ஆதார் விர்ச்சுவல் ஐடியை வழங்குகிறது. உங்கள் ஆதார் நம்பருக்கு பதிலாக இந்த 16 இலக்க தற்காலிக ஐடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விர்ச்சுவல் ஐடி (Virtual ID) ஆதார் அங்கீகாரம் தேவைப்படும் எல்லா சேவைகளுக்கும் பயன்ப்படுத்தப்படலாம். உங்கள் உண்மையான ஆதார் நம்பரை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் இந்த ஐடி உங்கள் தனி உரிமையை மேம்படுத்துகிறது. ஐடியை தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் செய்யலாம்.

இந்தியாவில் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் கார்டு அவசியம். டேட்டாவை பாதுகாத்து வைத்து இருப்பதன் அவசியம் அதிகரித்து வருவதால் UIDAI விர்ச்சுவல் ஐடியை வழங்குகிறது.
ஆதார் விர்ச்சுவல் ஐடி என்றால் என்ன?: ஆதார் விர்ச்சுவல் ஐடி என்பது உங்கள் உண்மையான ஆதார் நம்பருக்கு மாற்றாக செயல்படும் தற்காலிக, திரும்பப்பெறக்கூடிய எண்ணாகும். உங்கள் முக்கியமான விவரங்களை வெளிப்படுத்தாமல் உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க விர்ச்சுவல் ஐடி உதவும்.
இதன் மூலம் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தலாம். தங்கள் ஆதார் கார்டு நம்பரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் பயனர்களுக்கு இந்த ஐடி பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்டெப் 1: முதலில் UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். ஃபிஷிங் மோசடிகளைத் தவிர்க்க நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
ஸ்டெப் 2: UIDAI-இன் இணையதளத்தின் ஹோம் பேஜில், "My Aadhaar" என்ற மெனுவைக் கிளிக் செய்யவும். இந்த மெனுவின் கீழ், உங்கள் விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி மீட்டெடுப்பதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள். விர்ச்சுவல் ஐடியைப் பார்க்க லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: விர்ச்சுவல் ஐடியை உருவாக்க உங்கள் ஆதார் கார்டை அங்கீகரிக்க வேண்டும். இதை 2 வழிகளில் செய்யலாம். ஒன்று பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றொன்று OTP அங்கீகாரம்.
பயோமெட்ரிக் அங்கீகாரம்: பயோமெட்ரிக் அங்கீகாரம் பெற அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும்.
OTP அங்கீகாரம்: OTP அங்கீகாரம் செய்வதற்கு OTP பெற்று உங்கள் ஆதார் நம்பருடன் OTP விவரங்களை என்டர் செய்ய வேண்டும். விர்ச்சுவல் ஐடியை நீங்கள் வெற்றிகரமாக இந்த 2 முறைகளில் ஒன்றை பயன்படுத்தி அங்கீகரித்தவுடன் உங்கள் விர்ச்சுவல் ஐடியை உருவாக்குவதற்கான ஆப்ஷன் திரையில் காண்பிக்கப்படும்.
உங்கள் ஆதார் கார்டுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐடியை பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம். உங்கள் விர்ச்சுவல் ஐடியை எதிர்கால சேவைகளுக்காக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆதார் சரிபார்ப்பு தேவைப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் உண்மையான விவரங்களை ரகசியமாக வைத்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications