பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தான் ஜீவன் பிரமான் பத்திரம் அல்லது டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும்.
இந்த ஆவணத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் ஆதார் தளம் மூலம் எளிதாக டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் பெறும் வசதியை 2014ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் திட்டத்தின் பெயர் தான் ஜீவன் பிரமான் திட்டம்.
ஜீவன் பிரமான் திட்டம்
ஜீவன் பிரமான் திட்டம் மூலம் ஓய்வூதியதாரரின் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஆதார் தளத்தைப் பயன்படுத்தி எளிதாக லைப் சர்டிபிகேட்-ஐ சமர்ப்பிக்க முடியும்.
வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் உருவாக்கப்பட்டு, லைப் சர்டிபிகேட் களஞ்சியத்தில் சேமிக்கப்படும்.
ஜீவன் பிரமான் போர்ட்டல்
டிஜிட்டல் லைப் சான்றிதழை எவ்வாறு உருவாக்குவது என்பதற்குப் பல வழிகள் உள்ளன, ஜீவன் பிரமான் போர்ட்டலில் இருந்து எப்படிச் செய்வது என்பது இங்கே பார்ப்போம்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் நம்பர்
பென்ஷன் பேமெண்ட் ஆர்டர்
வங்கி கணக்கு
வங்கி பெயர்
மொபைல் நம்பர்
டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்
ஜீவன் பிரமான் தளம் மூலம் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் பெறுவது எப்படி..? இதற்கு முதல் படி மென்பொருள்-ஐ பெறுவது தான்
ஜீவன் பிரமான் சான்றிதழைப் பெற்ற https://jeevanpramaan.gov.in/ தளத்தில் இருக்கும் கிளயன்ட் மென்பொருள்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த மென்பொருள் ஆண்டுராய்டு, விண்டோஸ் இயங்கு தளத்தில் கிடைக்கிறது.
2 முறை
டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்-ஐ இந்த மென்பொருளை பயன்படுத்தியோ அல்லது ஜீவன் பிரமன் சென்டருக்கு சென்று ஆதார் தளத்தின் கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் செய்வதன் மூலம் மின்னணு அங்கீகாரத்தைப் பெறலாம். பின்னர் அந்தச் சான்றிதழை மின்னணு முறையில் ஓய்வூதியம் வழங்கும் அமைப்பிடம் எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
ஜீவன் பிரமான் போர்ட்டலில் இருந்து எப்படிச் செய்வது என்பது இங்கே பார்ப்போம்.
வழிமுறை
படி 1: மென்பொருள்-ஐ பதிவிறக்கம் செய்த பிறகு, ஓய்வூதியதாரர் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை அளிக்கவும். பதிவு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திற்கு OTP ஐ பெறுவார். இந்த OTPஐ சாப்ட்வேரில் உள்ளிட வேண்டும்.
படி 2: OTP ஐ உள்ளிடவும். புதிய திரையில் பெயர் & மின்னஞ்சல் முகவரியை ஐடியை அளித்து, 'ஸ்கேன் ஃபிங்கர்' என்பதைக் கிளிக் செய்யவும்.
கம்பியூட்டர்/மொபைல்/டேப்-ல் இணைக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனரில் கைரேகையை ஸ்கேன் செய்யவும் அல்லது ஐரிஸ் ஸ்கேனரில் ஐரிஸை (கண் கருவிழியை) ஸ்கேன் செய்யவும்.
படி 3: கைரேகை அல்லது ஐரிஸ் அங்கீகரிக்கப்பட்டதும், கீழே உள்ள திரையில் 'Device Registration successful' என்ற செய்தியை கணினி திரையில் காண்பிக்கும். இதற்குச் சரி என்பதைக் கிளிக் செய்யவும். இதுவரையில் நீங்கள் செய்தது அனைத்தும் மென்பொருள் மற்றும் பென்ஷன் வாங்குவரின் கருவியை ரிஜிஸ்டர் செய்வதற்கான பணிகள் மட்டுமே.
படி 4: இனி வருவது தான் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் உருவாக்கம். 'Device Registration successful' என்ற செய்தி-க்கு பின்பு ஓகே என்பதைக் கிளிக் செய்தால் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடும் இடம் வரும்.
படி 5: OTP ஐ உள்ளிட்டு சரி என்பதைக் கிளிக் செய்யவும்
படி 6: அடுத்தத் திரையில், ஓய்வூதியதாரர் பெயர், PPO எண், ஓய்வூதியத்தின் வகை, அனுமதி வழங்கும் அதிகாரத்தின் பெயர், விநியோகம் செய்யும் முகமை, மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களைக் கட்டாயம் உள்ளிடவும். மறுமணம் செய்த விருப்பங்கள், மறு வேலை வாய்ப்புகளுக்குக் கீழ் உரிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 7: பின்னர் 'ஸ்கேன் ஃபிங்கர்' பட்டனை கிளிக் செய்யவும் & இது விரல்/கருவிழி ஸ்கேனிங் செயல்முறையைத் தொடங்கும்.
கடைசி ஸ்டெப்
கைரேகை, கருவிழி அங்கீகாரம் வெற்றிகரமாக இருந்தால், ஓய்வூதியதாரரின் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் காட்டப்படும் இதை அப்படியே பிரின்ட் செய்துக்கொள்ள முடியும். மேலும் ஓய்வூதியதாரரின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் acknowledgement வழங்கப்படும். இந்த SMS ஜீவன் பிரமான் சான்றிதழ் ஐடி-யும் கொண்டு இருக்கும்.
எப்படி டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் பதிவிறக்கம் செய்வது
ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஜீவன் பிரமான் ஐடி அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்-ஐ ஜீவன் பிரமான் இணையதளத்திலிருந்து (https://jeevanpramaan.gov) PDF நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications