தங்களுக்கென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக விலை உயர்ந்த கார்களையும் சிறுக சிறுக பணம் சேர்த்து சிலர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்குப் பின்பு தான் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறது. உங்களுடைய பணி கார் ஓட்டுவது மட்டுமின்றி அதற்கான பாதுகாப்பு விஷயங்களை செய்வதிலும் அடங்கி இருக்கிறது. உங்கள் காரை சாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், எதிர்பாராத விபத்துகள் அல்லது திருட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கார் இன்சூரன்ஸ் அவசியமாகிறது.
ஆனால் கார் இன்சூரன்ஸ் ஆவணங்களை தவறவிட்டால் என்ன செய்வது? கவலைப்பட வேண்டாம். இந்தப் பதிவில் டூப்ளிகேட் கார் இன்சூரன்ஸ்-ஐ பெறுவது எப்படி? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கார் இன்சூரன்ஸ் பாலிசி பேப்பர்கள் என்றால் என்ன?: அதில் என்ன தகவல்கள் இருக்கும்?: நீங்கள் காரை வாங்கிய பிறகு அதற்கு கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கி விட்டீர்கள் என்றால் பாலிசி எடுத்ததற்கு ஆதாரமாக காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு பாலிசி ஆவணத்தை வழங்குகிறது. இந்தப் பேப்பரில் பல முக்கிய தகவல்கள் இருக்கும்.
காப்பீட்டு நிறுவன விவரங்கள் பாலிசியை வாங்கிய தேதி, பாலிசி செல்லுபடி ஆகும் தேதி, தொடங்கும் தேதி பாலிசி நடைமுறையில் இருக்கும் தேதி ஆகியவற்றை காணலாம். கார் இன்சூரன்ஸ் பாலிசி பேப்பரில் கார் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர், வாகன தயாரிப்பு விவரங்கள் மற்றும் மாடல் விவரங்கள் போன்ற வாகனம் சார்ந்த விவரங்களும் இருக்கும்.
நீங்கள் விரிவான கார் காப்பீட்டை வாங்கியிருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனத்தின்படி உங்கள் காரின் மதிப்பு தொடர்பான தகவலைக் காண்பீர்கள். தேவை ஏற்படும் போது நீங்கள் உரிமைகோரக்கூடிய தொகை இதுவாகும். நீங்கள் வாங்கிய பாலிசி ஆட்-ஆன்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் பற்றிய தகவல்களும் இருக்கும்.
டூப்ளிகேட் கார் இன்சூரன்ஸ்-ஐ பெறுவது எப்படி?: உங்களுடைய கார் இன்சூரன்ஸ்-இன் டூப்ளிகேட் காப்பியை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
உங்கள் மெயிலை சரிபார்க்கவும்: பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் செயல்படுகின்றன. மேலும் நீங்கள் பாலிசியை வாங்கும்போது காப்பீட்டு நிறுவனம் உங்களின் சரியான மெயில் ஐடிக்கு பாலிசி ஆவணத்தின் காபியை அனுப்பும். எனவே உங்கள் மெயில் மூலமாக பாலிசி ஆவணங்களின் PDF-ஐ எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்நுழையவும்: காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பாலிசியை நேரடியாக வாங்கியிருந்தால், நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து கார் இன்சூரன்ஸ் பாலிசியின் டூப்ளிகேட் காபியை பெறலாம்.
காப்பீட்டு நிறுவனத்தின் அப்ளிகேஷன் அல்லது வாட்ஸ் அப் சப்போர்ட்டை அணுகவும்: தற்போது பல காப்பீட்டு நிறுவனங்களும் வாட்ஸ் அப் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சப்போர்ட்டை வழங்குகிறது. காப்பீட்டு நிறுவனத்தின் அப்ளிகேஷனையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். அதிலிருந்து டூப்ளிகேட் பாலிசியை பெற்றுக் கொள்ளலாம்.
காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து டூப்ளிகேட் பாலிசியை பெறுவது எப்படி?:
வாடிக்கையாளர் சேவையை அணுகவும்: காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அணுகவும். தொலைபேசியில் அவர்கள் கேட்கும் விவரங்களை கொடுத்தால் காப்பீட்டு நிறுவனம் உங்கள் காப்பீட்டின் நகலை மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
அருகிலுள்ள காப்பீட்டு நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும்: நீங்கள் உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கு அருகில் காப்பீட்டு நிறுவனம் இருந்தால் நேரிலேயே அலுவலகத்திற்குச் சென்று, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்று அவர்களிடம் சொல்லலாம். அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் உங்கள் பாலிசியின் நகலை மீட்டெடுத்து, நகலை அச்சிட்டு, சில நிமிடங்களில் உங்களுக்கு வழங்குவார்கள்.
காரை வாங்கிய ஷோரூமில் இருந்து பாலிசியைப் பெறலாம்: நீங்கள் கார் ஷோரூமில் இருந்து பாலிசியை வாங்கினால், டீலரின் அலுவலகத்திற்குச் செல்லலாம்.
காப்பீட்டு முகவரிடமிருந்து: நீங்கள் ஒரு காப்பீட்டு முகவர் மூலம் கார் காப்பீட்டை வாங்கியிருந்தால், அவர்களை அழைக்கவும், அவர்கள் உங்கள் கார் பாலிசியின் நகலை மீட்டெடுத்து உங்களுக்கு அனுப்புவார்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications