இனி ஆதார் ரீபிரிண்ட் செய்ய முடியாது.. பிவிசி கார்டு அப்ளை செய்யலாம்.. ஆன்லைனில் எப்படி செய்வது..!

ஆதார் கார்டு இன்றைய காலத்தில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் சரி, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமென்றாலும் சரி, நிச்சயம் ஆதார் கார்டு என்பது அவசியமாக உள்ளது.

ஏன் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்ய கூட, ஆதார் அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.

அதோடு அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இன்றிமையா ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முக்கிய ஆவணங்களின் ஒன்றான ஆதார் கார்டு

முக்கிய ஆவணங்களின் ஒன்றான ஆதார் கார்டு

மத்திய அரசின் ஆதார் ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க எண் தான் ஆதார் கார்டு. இந்திய மக்கள் அனைவருக்கும் இந்த ஆதார் வழங்கப்பட்டு வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்கள் திருத்தம், உள்ளிட்ட பல சேவைகள், மாற்றங்களையும், ஆன்லைனிலேயே செய்து கொள்ளும் வசதியினை அரசு ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான பிவிசி கார்டு

பாதுகாப்பான பிவிசி கார்டு


இதற்கிடையில் ஆதார் கார்டினை ரீபிரிண்ட் எடுக்கும் சேவையினை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் பிவிசி கார்டுகளுக்காக அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. உண்மையில் அடிக்கடி ரீபிரிண்ட் செய்வதை விட, ஏடிஎம் போன்ற பிவிசி கார்டுகளை பயன்படுத்துவது நல்ல விஷயம் கூட. அதோடு மிகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

எங்கு அப்ளை செய்வது?

எங்கு அப்ளை செய்வது?

அதெல்லாம் சரி எப்படி இந்த பிளாஸ்டிக் கார்டினை டவுன்லோடு செய்வது? வாருங்கள் பார்க்கலாம். இதற்காக நீங்கள் அரசின் https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் get aadhaar என்ற ஆப்சனில், oarder aadhaar PVC card என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

எப்படி லாகின் செய்வது?

எப்படி லாகின் செய்வது?

அடுத்து இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதிலும் உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து லாகின் செய்யலாம். ஆதார் நம்பரை கொடுத்து, அதோடு கீழே கொடுக்கப்பட்ட கேப்ட்சா நம்பரையும் கொடுத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் send OTP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அப்படி இல்லாவிட்டால், மொபைல் எண் இல்லாவிடில் my mobile number is not registered என்ற பாக்ஸினை கிளிக் செய்யவும்.

மொபைல் நம்பர் இல்லாவிடில்

மொபைல் நம்பர் இல்லாவிடில்

மொபைல் நம்பர் இல்லை என்ற ஆப்சனை கிளிக் செய்தால், கீழே உங்கள் கையில் இருக்கும் மொபைல் நம்பரை பதிவு செய்ய ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஓடிபினை கொடுத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்சை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

விவரங்களை செக் செய்யுங்கள்

விவரங்களை செக் செய்யுங்கள்

அதன் பிறகு நீங்கள் மொபைல் எண் பதிவு செய்திருந்தால், உங்கள் ஆதார் எண் விவரங்கள் வரும். மொபைல் எண் பதிவு செய்யாதிருந்தால், விவரங்கள் எதுவும் இருக்காது. அதன் ஒரு முறை வெரிபை செய்து கொண்டு கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு , make payment என்ற ஆப்சன் வரும்.

பேமெண்ட் ஆப்சன்

பேமெண்ட் ஆப்சன்

அதில் கார்டு (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம், அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ, யுபிஐ ஐடி மூலமாகவோ பணம் செலுத்திக் கொள்ளலாம். அதில் பேமெண்ட் செலுத்திய பிறகு கன்பார்ம் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். உங்களிடம் இருக்கும் ஆப்சனை கிளிக் செய்து கன்பார்ம் செய்து கொள்ளவும். இதனை கொடுத்து கன்பார்ம் செய்ததும், உங்களுக்கு டவுன்லோடு பேமெண்ட் ரசீது வரும். அதனையும் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

எப்படி ஸ்டேட்டஸ் பார்ப்பது?

எப்படி ஸ்டேட்டஸ் பார்ப்பது?

உங்களது ஆதார் பிவிசி கார்டின் ஸ்டேட்டசினை எப்படி பார்ப்பது. மீண்டும் ஆதார் uidai முகப்பு பக்கத்திற்கு செல்லவும். அதில் check aadhaar pvc card status என்பதை கிளிக் செய்து, அதில் மேலே சேமித்து வைத்துள்ள ரசீதில் உள்ள SRN நம்பர், ஆதார் நம்பர், கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்யவும். நீங்கள் அப்ளை செய்து 7 நாட்களில் உங்கள் வீட்டிற்கே வரும். அப்படியில்லாவிட்டால் இந்த இணையத்தில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+