3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. !

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வரும் ரேஷன் கார்டு, முக்கிய ஆவணமாக மட்டும் அல்லாது, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வாங்கவும் பயன்படுகின்றது.

அதோடு சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் கூட, ரேஷன் கார்டு மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது.

இப்படி முக்கியமாக இருந்து வரும் ஆவணத்தினை எளிதில் விண்ணப்பித்தும் பெற முடியும்.

 டிஜிட்டல் மயமாக்கல்

டிஜிட்டல் மயமாக்கல்

இந்தியாவினை பொறுத்தவரையில் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரப்படுகின்றது. இதன் மூலம் மக்கள் மாத கணக்கில் அலைந்து திரிந்த காலம் போய், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, சில நிமிடங்களில் தங்களது வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். முன்பெல்லாம் புதியதாக ஒரு ரேஷன் கார்டு வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்காக பல மாதம் அலைந்து விண்ணப்பித்திருக்கலாம். அந்த கார்டு வரவும் பல மாதங்கள் ஆகியிருக்கலாம்.

 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆனால் இன்று ஆன்லைனிலேயே எளிதில் இந்த சேவையினை பெற முடியும். மேலும் இதன் மூலம் மாத கணக்கில் செய்த வேலையை, சில நாட்களில் செய்து கொள்ளலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் கிடைக்க என்ன செய்யலாம். எப்படி ஆன்லைனில் விளண்ணப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம்.

 இணையத்தில் எப்படி விண்ணபிப்பது?

இணையத்தில் எப்படி விண்ணபிப்பது?

https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், புதிய மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும்.

அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும்.

அதோடு விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.

 என்ன அட்டை

என்ன அட்டை

அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்துக் கொள்ளலாம்.

 

 

 உறுப்பினர்கள் சேர்க்கை

உறுப்பினர்கள் சேர்க்கை

உறுப்பினர்கள் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். அதில் இல்லாதவற்றை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

 குழந்தைகள் பெயர்

குழந்தைகள் பெயர்

குடும்ப அட்டையில் குழந்தைகளின் பெயரை சேர்க்க, குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன் மகள், மனைவி என்பதை கொடுக்க வேண்டும். அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் திருத்தம் எனில் அதனை கிளிக் செய்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.

 கேஸ் விவரம்

கேஸ் விவரம்

அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை கொடுக்க வேண்டும்.

கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும்.

எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat). ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் என கொடுக்கவும்.

அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து கொண்டு, உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

 சரியானதா?

சரியானதா?

நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியானதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். ஆக அதனை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

 குறிப்பு எண்

குறிப்பு எண்

உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை வைத்து உங்களது ரேஷன் கார்டு எந்த கட்டத்தில் உள்ளது என பார்த்துக் கொள்ளலாம்.

இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம், விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் விரைவில் உங்களது விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்

 விண்ணப்பத்தின் நிலை என்ன?

விண்ணப்பத்தின் நிலை என்ன?


இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும்.

நீங்கள் விண்ணப்பித்த புறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு.

உங்கள் ஆவணங்கள் சரியாக இருப்பின், மூன்று நாட்களில் உங்களது ரேஷன் கார்டுக்கு அப்ரூவல் கிடைத்து விடும். அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இதை தற்போது 15 நாட்களில் பெற முடியும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+