இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கிறது. நம்முடைய அனைத்து விதமான நிதி பரிவர்த்தனைகளையும் பான் எண் இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி, கடன் பெறுவது, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது என அனைத்திற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டால் அதற்கு மாற்றாக டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்து பெற முடியும். ஆன்லைனிலேயே இதற்கான விண்ணப்பத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் அது எப்படி என்பதை தான் நம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம் .

முதலில் https://onlineservices.proteantech.in/paam/ReprintEPan.html என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே சென்றவுடன் உங்களுடைய பான் நம்பர் கேட்கப்படும். பான் நம்பர், அதனை தொடர்ந்து ஆதார் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு சப்மிட் செய்யப்பட்ட பிறகு பான் கார்டினை பெற கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இருப்பவர்கள் 50 ரூபாயும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் 959 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை யுபிஐ ,டெபிட் கார்டு, அல்லது கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம். தொடர்ந்து உங்களுக்கான ஒரு அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் கிடைக்கும். அந்த 15 இலக்க கொண்ட அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும்.
நம்முடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை பரிசோதனை செய்து கொள்ள இந்த 15 இலக்க அக்னாலஜ்மெண்ட் நம்பர் அவசியம் என்பதால் அதனை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து 15 லிருந்து 20 நாட்களுக்குள் டூப்ளிகேட் பான் கார்டு நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு கொரியர் முறையில் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
அதே சமயம் உங்களுக்கு ஈ பான் கார்டு வேண்டும் என்றால் https://www.onlineservices.proteantech.in/paam/requestAndDownloadEPAN.html இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் பான் நம்பர், அதனை தொடர்ந்து ஆதார் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும். உங்களின் பான் கார்டினை பிடிஎஃப் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய பான் கார்டு காணாமல் போயிருக்கிறது என்றால் அது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. எனவே அருகில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications