அவசரகாலங்களில் திரட்டப்படும் நிதியானது பல நேரங்களில் வாழ்க்கையைக் காப்பாற்றுவதாக இருக்கும். இந்த நிதியை எப்படி திரட்டுவது என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதன் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள்: ஆத்திர அவசரத்துக்கு என்றால் கிரெடிட் கார்டுகள் உண்மையிலேயே ஓர் ஆபத்பாந்தவன் என்று சொல்லலாம். பெற்ற பிள்ளைகளோ கூடப் பிறந்தவர்களோ கூட இப்படி வந்து சமயத்தில் உதவுவதில்லை. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு கடனை வாங்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு உரிய தேதியில் பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டால் மிகவும் பயனுள்ளது இந்த கிரெடிட் கார்டு. புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் 50 நாட்கள் வரை எந்தவித வட்டித் தொகையும் இல்லாமல் கடனைத் திரும்ப அடைத்து பயனைப் பெறலாம்.
ஆனால் தேதி தப்பிவிட்டாலோ மிகக் கடுமையான வட்டியைப் போட்டு சாத்தி விடுவார்கள். ஒழுங்காக கட்டவேண்டிய தேதியில் பணத்தை செலுத்திட்டால் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது. பெரிய கடன் தகை பெற்றிருந்தால் அதை மாதாந்திர இஎம்ஐகளாக மாற்றிக் கொள்ளும் வசதியும் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
பங்குகளுக்கு எதிரான கடன்: இந்தக் கடனை லோன் அகைன்ஸ்ட் செக்யூரிடீஸ் என்பார்கள். பங்குகள், மியூச்சுவல் பண்ட்ஸ், பாண்டுகள் அல்லது பிக்ஸட் டெபாசிட்கள் ஆகியவற்றை உத்தரவாதமாகத் தந்து குறுகிய கால கடன்களைப் பெறலாம். இதுபோன்ற கடனுதவிகளுக்கான வட்டித்தொகை மிகவும் கொஞ்சமாகவே இருக்கும். எனவே இந்த வகைக்கடன்களும் அவசரத்துக்கு உதவும். அத்துடன் வட்டிச்சுமையும் குறைவாகவே இருக்கும்.
பீர் டு பீர் பைனான்ஸ்: தனிப்பட்ட நபர்களிடமிருந்து வட்டிக்கடன்களைப் பெறலாம். நாணயமாக நடந்துகொண்டால் நினைத்த நேரத்தில் கடனுதவி கிடைக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் தனிப்பட்ட நபர்கள் என்பதால் அவர்கள் சொல்வதுதான் வட்டி. நமது நிதி நெருக்கடியை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றால் கடுமையான வட்டியைப் போட்டுத் தாக்கிவிடுவார்கள். இதில்தான் பலர் நும்பி ஏமாந்து போவார்கள். வட்டிக்கு வட்டி கட்டி ஓய்ந்து விடுவார்கள்.
குறுகிய கால கடன்கள்: வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான விண்ணப்பங்கள் மிக விரைவாக ப்ராஸஸ் செய்யப்பட்டு கடனுதவி வழங்கப்படும். கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் இருக்கும். வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று கடன்களை அளிக்கும். சில சமயம் குறிப்பிட்ட கடன் தொகைக்கு எந்தவித சிரமும் படாமல் முன்கூட்டியே அனுமதியும் தரப்பட்டிருக்கும்.
ஓவர்டிராப்ட் வசதி: வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கயாளர்களுக்கு அவர்களது இருப்பைக் காட்டிலும் சற்று அதிகமாக பணத்தை எடுத்துக் கொள்வதற்கு முன் அனுமதி தரப்பட்டிருக்கும். இதை ஓவர் டிராப்ட் என்பார்கள். எதிர்பாராதவிதமாக ஏற்படும் பணச்சிக்கல்களை இந்த கடனுதவி வசதி பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications