டெல்லி: இந்தியாவில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலே செலவு தான் என்ற சூழல் நிலவுகிறது. ஒரு காய்ச்சல் என மருத்துவமனைக்கு சென்றால் கூட நாம் பல ஆயிரங்களை செலவிட வேண்டி இருக்கிறது.
இலவச மருத்துவ ஆலோசனை: மருத்துவரின் ஆலோசனைக்காக நாம் வழங்கக்கூடிய கட்டணம் மருந்துகளின் கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதுவும் கிராமங்களில் மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவைகள் அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. அதுவும் ஒரு நிபுணரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்றால் ஆலோசனை கட்டணமே ஆயிரம் ரூபாயை கடந்துவிடுகிறது. மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

eSanjeevni திட்டம் : சாமானிய மக்கள் எளிமையாக தாங்கள் இருந்த இடத்திலிருந்து ஆன்லைனில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற முடியும். இதற்கான ஒரு சேவையை தான் மத்திய அரசு வழங்கி வருகிறது. அது குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். நாட்டின் சுகாதார துறையில் பல்வேறு நவீன மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் eSanjeevni திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற முடியும்.
எப்படி பெறுவது: இதற்கு மக்கள் eSanjeevni இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://esanjeevani.mohfw.gov.in/#/ -க்கு செல்ல வேண்டும். செல்போன் அல்லது லேப்டாப்பில் இந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இதுவரை கிட்டதட்ட 40 கோடி இலவச மருத்துவ ஆலோசனைகள் இந்த தளம் மூலம் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டத்தை அறிமுகம் செய்தது.

போனிலேயே இலவச ஆலோசனை: https://esanjeevani.mohfw.gov.in/#/ இணையதளத்திற்கு சென்று Patient என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்தவுடன் Login , register என இரண்டு ஆப்ஷன்கள் காட்டும். இதில் இலவச மருத்துவ ஆலோசனை பெற ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்க்வுண்ட் எனப்படும் ABHA ஐடி பெற்றிருக்க வேண்டும். ABHA இணையதளத்தில் சில நிமிடங்களிலேயே உங்களின் ஐடி பெற முடியும்.
எப்படி லாகின் செய்வது: உங்களின் ABHA ஐடி உள்ளிட்டால் பதிவு செய்யப்பட்ட உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொண்டு ரிஜிஸ்ட்ர் செய்த உடன் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்படும். அந்த அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்தவுடன் மீண்டும் லாகின் செய்ய வேண்டும்.
உங்கள் மொழியில் ஆன்லைனில் மருத்துவம்: இதனை தொடர்ந்து consult now என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் உடலில் தற்போது என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்ற விவரங்கள் கேட்கப்படும் அந்த விவரங்களை நீங்கள் உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து உங்களிடம் இருக்கும் மருத்துவ ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் . உங்கள் மொழியில் உங்கள் மாநிலத்தில் தற்போது எந்த மருத்துவர் ஆலோசனைக்கு இருக்கிறார் என்பது காட்டும், அதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
வீடியோ காலில் மருத்துவர்கள்: ஆன்லைனில் இருக்கும் மருத்துவர் வீடியோ கால் முறையில் உங்களை தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார். உங்களுக்கான மருந்து பரிந்துரைகளையும் வழங்குவார். இதற்கு எந்த ஒரு கட்டணமும் நீங்கள் செலுத்த தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் அல்லது செயலி வாயிலாகவே மருத்துவ ஆலோசனை பெறலாம். உங்களின் நேரம் , பணம் ஆகியவை தில் மிச்சமாகும்.
மருத்துவர்கள் பட்டியல்:அலோபதி மற்றும் ஆயுஷ் மருந்துவர்கள் என பல மருத்துவர்களுடன் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம். ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இந்த இலவச மருத்துவ ஆலோசனை என்பது கிடைக்கும். தமிழ்நாட்டில் எந்தெந்த துறை சார்ந்த மருத்துவர்கள் எந்தெந்த துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்ற விவரங்களை நாம் https://esanjeevani.mohfw.gov.in/#/opd-timing என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications