பொதுவாக கடன் என்றால் தங்கம் மற்றும் நிலம் உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து தான் வாங்க வேண்டும் என்ற சூழல் தற்போது மாறி இருக்கிறது. நம்முடைய மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்போலியோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட் போர்ட் போலியோவை கூட நாம் அடகு வைத்து அவசர காலத்திற்கு பணமாக வாங்க முடிகிறது.
பங்குகள் மீது கடன்: நம்முடைய தனிப்பட்ட தேவைகளாக இருக்கட்டும் அல்லது ஒரு பிசினஸ் நோக்கத்திற்காக நம்முடைய பங்கு சந்தை போர்ட்போலியோவை நாம் அடமானமாக காட்டி கடன் வாங்க முடியும். முதலில் இது எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்படி நாம் நம்முடைய தங்கத்தை ஒரு வங்கியில் அடகு வைத்து கடன் வாங்குகிறோமோ அதே போல தான் உங்களுடைய ஷேர் மார்க்கெட் போர்ட்போலியோவை அடமானமாக வைக்கலாம்.

போர்ட்போலியோவை அடமானம் வைக்கலாம்: நீங்கள் போர்ட்போலியோவை அடமானமாக வைக்கும் போது, அந்த போர்ட்போலியோவின் கட்டுப்பாடு வங்கியின் வசம் சென்றுவிடும். அதாவது அந்த போர்ட்போலியோவில் உள்ள பங்குகளில் நீங்கள் பெரிய மாற்றம் செய்ய முடியாது. ஒருவேளை உங்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் வங்கிகள் அந்த பங்குகளை விற்பனை செய்து கடன் தொகையை மீட்டு கொள்ளும்.
பங்குகள் யார் பெயரில் இருக்கும்?; பங்குகள் உங்களுடைய பெயரில்தான் இருக்கும் ஆனால் அதனை நீங்கள் விற்பனை செய்யவோ மாற்றி அமைக்கவும் முடியாது. அந்தப் பங்குகளில் நீங்கள் வங்கியின் அனுமதியில்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. உங்களுடைய கடன் திரும்ப செலுத்தப்பட்ட உடன் வங்கிகள் அந்த கட்டுப்பாட்டை மீண்டும் உங்களுக்கே தந்துவிடும் .
டிவிடெண்ட் கிடைக்காதா? : பங்குச்சந்தை போர்ட் போலியோவை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், அப்படி என்றால் எனக்கு வரக்கூடிய டிவிடெண்ட் , போனஸ் பங்குகள், பங்கு பிரிப்புகள் உள்ளிட்டவை வராமல் போகுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் இது அப்படி செயல்படுவது கிடையாது. உங்களுக்கு வரக்கூடிய டிவிடெண்ட் ,பங்கு பிரிப்பது ,போனஸ் பங்கு உள்ளிட்ட அனைத்துமே உங்களை வந்து சேரும் , ஆனால் அவற்றை விற்பனை செய்வது பணமாக்குவது உள்ளிட்டவற்றை உங்களால் மேற்கொள்ள முடியாது , உங்களுடைய பெயரில் அந்த பங்குகள் இருக்கும் அதற்கு நீங்கள் தான் உரிமையாளர் ஆனால் அதில் எந்த ஒரு மாற்றத்தையும் உங்களால் செய்ய முடியாது, ஏனெனில் அந்த போர்ட்போலியோவின் கட்டுப்பாடு முழுவதும் வங்கியின் வசம் இருக்கும்.
வங்கி பங்குகளை விற்க முடியுமா?: ஒருவேளை உங்களால் அந்த கடனை திரும்ப அடைக்க முடியவில்லை என்றால் மட்டுமே வங்கிகள் அந்த பங்குகளை விற்று பணத்தை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும். ஆர்பிஐ விதிமுறைகளின் படி உங்களுடைய பங்குகளின் தற்போதைய மொத்த சந்தை மதிப்பில் 50 சதவீதம் தொகையை நீங்கள் கடனாக பெற முடியும் . உதாரணமாக உங்களுடைய போர்ட்போலியோ மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றால் அதனை நீங்கள் அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் கடனாக பெறலாம்.
எந்த பங்குகளுக்கு கடன் இல்லை: மேலும் தேசிய பங்குச் சந்தையில் குரூப்-1 பிரிவில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் உங்களுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்புகளுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கும். கடந்த ஆறு மாதங்களில் அந்த நிறுவன பங்குகள் 80 சதவீதத்திற்கும் மேல் வர்த்தகமாகி இருக்க வேண்டும் . அப்படி என்றால் ஸ்மால் கேப் நிறுவனங்களில் உங்களுக்கு இருக்கும் பங்குகளுக்கு கடன் கிடைக்காது என அர்த்தம்.
எவ்வளவு சதவீதம் கடன்: அண்மையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி பங்கு போர்ட்போலியோவுக்கு எதிரான கடன் மதிப்பை 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தலாம் என பரிந்துரை வழங்கி இருக்கிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து உங்களுடைய ஒட்டுமொத்த போர்ட்போலியோ மதிப்பு குறைந்தால் வங்கிகள் என்ன செய்யும் என்ற கேள்வி எழலாம்.
பங்குகள் மதிப்பு சரிந்தால்?: உதாரணமாக நீங்கள் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகளுக்கு உரிமையாளராக இருக்கிறீர்கள் உங்களுடைய போர்ட்போலியோ மதிப்பு ஐந்து சதவீதம் சரிவடைந்து விட்டது என்றால் தற்போது உங்களுடைய பங்குகளின் மொத்த மதிப்பு 19 லட்சம் ரூபாய் . உங்களுக்கு ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கி விட்டது எனும் போது இப்போதுள்ள மதிப்பின் உங்களுக்கு கடன் தகுதி 9,50,000 ரூபாய் தான். ஆனால் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டீர்கள் எனும் போது, வித்தியாசம் 50,000ஐ மார்ஜின் கால் என வங்கிகள் அழைக்கும்.
வங்கிக்கு உரிமை அதிகம்: இந்த 50,000ஐ நீங்கள் பணமாக செலுத்தி அதனை கணக்கில் பராமரிக்க வேண்டும் இதற்கு வங்கிகள் உங்களுக்கு கால அவகாசம் வழங்கும். ஒருவேளை வங்கி குறிப்பிட்ட தேதிக்குள் உங்களால் அந்த மார்ஜின் கால் பணத்தை செலுத்த முடியவில்லை எனும் போது , வங்கி உங்கள் பெயரில் இருக்கக்கூடிய பங்குகளை விற்பனை செய்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளும். இந்த விவகாரத்தில் நாம் வங்கிக்கு எதிராக எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியாது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications