சென்னை: ஆதார் என்பது NRIகள் உட்பட இந்தியாவில் வாழும் மக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க சிறப்பு எண் ஆகும்.
ஆதாரில் குறிப்பாக ஆதார் PVC அட்டை, eAadhaar மற்றும் mAadhaar போன்ற பல்வேறு வகையான ஆதார் வடிவங்கள் உள்ளன, மேலும் அவை அனைத்தும் சமமாக அனைவராலும் உபயோகப்படுகிறது.

PVC கார்டு (PVC Card): PVC கார்டு என்பது எல்லோரும் வைத்திருக்கும் அதே கார்டுதான். மாற்றம் என்னவென்றால் இது அனைவராலும் தங்களின் வாலட்களில் ஈசி ஆக எடுத்து செல்ல பயன்படுகிறது. இப்போதெல்லாம் அனைத்து வங்கிகளுக்கும் ஆதார் முக்கியமாகி விட்டது. அதற்கு நாம் அதை கிழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு பிவிசி(Polyvinyl குளோரைடு) ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் பெயர், விலாசம், ஆதார் நம்பர் போன்ற தகவல்கள் இருக்கும். இது பிளாஸ்டிக் ஆதார் என்பதால் நீரில் போட்டால் கூட நனையாமல் இருக்கும்.
ஆதார் பிவிசி கார்டில் டிஜிட்டல் முறையில் கூடிய அட்டைதாரரின் கையெழுத்து அடங்கிய QR code, சில புள்ளி விவரங்கள் மற்றும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.
ஆதார் நம்பர்(Aadhaar number), மெய்நிகர் ஐடி (Virtual ID) அல்லது பதிவு ஐடி(Enrollment ID) ஆகியவற்றைக் கொண்டு uidai.gov.in அல்லது mAadhaar ஆப் மூலம் 50 ரூபாய் செலுத்தி பெறலாம். அதன் பின் உங்களுடைய பிவிசி கார்டு ஸ்பீட் போஸ்ட் இல் உங்கள் வீட்டிற்கு வரும்.
PVC Aadhaar Card எவ்வாறு பெறுவது?
Step 1: PVC ஆதார் கார்டு பெற UIDAI இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது mAadhaar ஆப் ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
Step 2: அதன்பின் virtual id அல்லது ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
Step 3: ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
Step 4: பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை என்டர் செய்து அட்ரஸ் விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
Step 5: இங்கு நீங்கள் பிவிசி கார்டு பெற ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
Step 6: அணைத்து ஸ்டெப்களும் முடிந்த பின் நீங்கள் உங்கள் பிவிசி ஆர்டர் ஐ mAadhaar அல்லது UIDAI இணையதளம் வாயிலாக ட்ராக் செய்ய முடியும். அதன்பின் 15 நாட்களுக்குள் உங்கள் PVC கார்டு டெலிவரி செய்யப்படும்.
நீங்கள் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைலில் இருந்து பிவிசி கார்டு ஆர்டர் செய்யும்போது, அந்த எண்ணிற்கு OTP வரும். நீங்கள் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணில் இருந்தும் OTP பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications