டெல்லி: பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் பயன்படுத்தி வரும் பான் கார்டுகளை ஆன்லைன் வாயிலாகவே நாம் புதிய பான் கார்டுகளாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் பல்வேறு சேவைகளையும் மத்திய அரசு நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்து டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு பான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நாம் நம்முடைய பான் கார்டுகளை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பான் 2.0 திட்டத்தின் மூலம் புதிய பான் கார்டை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய பான் கார்டில் க்யூஆர் கோடு இடம்பெற்றிருக்கும். அது தவிர நம்முடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் இதில் பராமரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாம் இலவசமாக புதிய பான் கார்டு பெறலாம்.
இதற்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும். பான் கார்டு தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் க்யூ ஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என்பதால் ஒருவருடைய தகவல்களை திருடுவது கடினமானதாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதனால் நம்முடைய பான் எண் மற்றும் பான் கார்டை கொண்டு நடத்தப்படக்கூடிய மோசடிகள் அனைத்தும் தடுக்கப்படும். ஒரு நபருடைய பெயரில் போலியான பான் கார்டுகள் உருவாக்குவது கடினம் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பு நிறைந்தது என அரசு கூறுகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பழைய பான் கார்டுகளை புதுப்பித்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியா - சீனா உறவு.. கலர் மாறுதே.. சீன பிராண்டுகள் பரபரன்னு வேலை பார்க்குறாங்களே..!
- இதற்கு NSDL இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- விவரங்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சப்மிட் செய்ய வேண்டும்.
- இதனை அடுத்து உங்களின் விவரங்களை சரிபார்த்து இணையதளம் மீண்டும் காண்பிக்கும்.
- இப்போது சரிபார்ப்பினை அங்கீகரிக்க ஓடிபி கேட்கப்படும். உங்களுக்கு வந்த ஓடிபியை நீங்கள் உள்ளிட வேண்டும்.
- Agree to the terms and conditions என்பதை கிளிக் செய்தால் அடுத்த 15 நிமிடங்களில் உங்களின் புதிய பான் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும்.
- பான் அட்டையாக வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினால் 15 நாட்களில் புதிய பான் கார்டு வீடு தேடி வரும்.
- NSDL க்கு மாற்றாக UTIITSL இணையதளத்திற்கு கூட செல்லலாம். அதிலும் மேலே கூறிய நடைமுறைகளே பின்பற்றப்படும்.
Story Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications