சென்னை: தற்போது எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதில் ஓய்வு காலத்திற்காகவே மத்திய அரசு நடத்தி வரக்கூடிய ஒரு சிறப்பான திட்டம் குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகிறோம். இதில் திட்டமிட்டு முதலீடு செய்தால் ஒரு நபர் தன்னுடைய ஓய்வு காலத்தில் மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும்.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் அதாவது தேசிய ஓய்வூதிய அமைப்பு. இதனை என்பிஎஸ் என்றும் அழைக்கலாம். ஓய்வு காலத்திற்கு என்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம் தான் இது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னாளில் பொதுமக்கள் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். சராசரியாக நாம் செய்யும் முதலீடுகளுக்கு 9 முதல் 12% வரை வட்டி வருமானம் தருகிறது.

தற்போது ஒரு நபருக்கு 35 வயது ஆகிறது என வைத்துக் கொள்வோம் அவர் 60 வயதாகும் வரை அதாவது அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு என்பிஎஸ் திட்டத்தின் கீழ் சரியான முறையில் முதலீடு செய்தால் அவர் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும்.
இதற்கு அந்த நபர் தன்னுடைய 35 வயதிலிருந்து 25 ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை என்பிஎஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். அந்த வகையில் 25 ஆண்டுகளில் இவர் செய்த முதலீட்டு தொகை 45 லட்சம் ரூபாய். இதில் வட்டி வருமானம் சராசரியாக 10 சதவீதம் என வைத்துக் கொண்டால் கூட 60 வயது ஆகும்போது இவருக்கு கிடைத்த வட்டி 1.55 லட்சம் ரூபாய் ஆகும்.
என்பிஎஸ் திட்ட கால்குலேட்டரின் படி இது கணக்கிடப்பட்டுள்ளது. 60 வயதாகும் போது இந்த நபரின் என்பிஎஸ் கணக்கில் இவர் செய்த முதலீடு 45,00,000 ரூபாய், இவருக்கு கிடைத்த வட்டி 1,55,68,356 ரூபாய் என மொத்தமாக 2,00,68,356 ரூபாய் இருக்கும்.
60 வயதுக்கு பின்னர் இதில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாகவும் குறிப்பிட்ட தொகையை வருடாந்திர தொகையாகவும் பிரிக்க வேண்டும். அதாவது மொத்த தொகையில் 50% தொகையை வருடாந்திர தொகையாக கணக்கிலேயே வைக்க வேண்டும்.
அதாவது 1,00,34,190 ரூபாயை ரொக்கமாக எடுத்து கொள்ளலாம், 1,00,34,191 ரூபாயை வருடாந்திர தொகையாக விட்டுவிடலாம். இதற்கு 7% வருமானம் கிடைக்கும் என வைத்து கொண்டால் உங்களுக்கு மாதந்தோறும் 58,533 ரூபாய் ஓய்வூதியமாக கிடைத்துவிடும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications