அடமானம் வைப்பதற்கு நம்மிடம் எந்த ஒரு பொருளும் இல்லாத சூழலில் வங்கிகளில் கடன் பெறுவதற்கு நமக்கு உதவுபவை பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள். இத்தகைய தனிநபர் கடன்கள் மூலம் நாம் எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்காமல் குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற முடியும்.
ஆனால் மற்ற கடன்களை விட தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நாம் தனிநபர் கடன்களை வாங்கி இருந்தால் பெருமளவில் வரி விலக்கு கிடைக்கிறது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடன்களை பொறுத்தவரை அந்த கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். அதாவது வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 b-யின் கீழ் ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காக தனிநபர் கடன் எடுத்து இருக்கிறீர்கள் என்றால் ஓர் நிதியாண்டில் நீங்கள் ரூ.30,000 வரை இந்த கடனுக்காக செலுத்திய வட்டி தொகையில் வருமான வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வேளை நீங்கள் வெளிநாட்டில் சென்று மேற்படிப்பினை படிப்பதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால், இதற்காக நீங்கள் செலுத்திய மொத்த வட்டி தொகைக்குமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.
தனி நபர் கடன் வாங்கி உங்களது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்தி இருந்தால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 36(1)(iii) -யின் கீழ் நீங்கள் வரி விலக்கு கோர முடியும். அதாவது உங்களுடைய தொழிலுக்கு தேவையான ஒரு சிறப்பு உபகரணத்தையோ அல்லது இயந்திரத்தையோ வாங்குவதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால் இந்த கடனுக்காக நீங்கள் செலுத்திய மொத்த வட்டி தொகைக்குமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.
உங்களது வீட்டில் கூடுதலாக ஒரு அறையை கட்டுவதற்கோ அல்லது புனரமைப்பு செய்வதற்கோ தனிநபர் கடன் வாங்கினால் அதற்கும் வரி விலக்கு கிடைக்கும். வருமானவரி சட்டத்தின் பிரிவு 24 b-யின் கீழ், இந்த வரி சலுகையை பெறலாம்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது அதில் நீங்கள் கூடுதலாக ஒரு அறையை சேர்க்கிறீர்கள் அல்லது உங்க வீட்டு மாடியில் ஒரு அறையை கட்டுகிறீர்கள் என்ற பட்சத்தில், அதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால் அதற்கு செலுத்தக்கூடிய வட்டிக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை நீங்கள் செலுத்தும் வட்டி தொகைக்கு வருமான வரி சலுகை கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications