இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தை சுங்க கட்டணமாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்கின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்தியாவில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்றன. இவ்வாறு செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் தவிர கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்தி ஆக வேண்டும்.
சுங்க கட்டணம்: தற்போது சுங்க கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்டேக் என்ற முறை அமலில் இருக்கிறது. வரும் 15ஆம் தேதியிலிருந்து இந்திய சுங்கச்சாவடிகளில் புதிய சுங்க கட்டண வசூல் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன்படி தனியார் வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுக்கு என ஆண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் (Fastag annual pass ) பெற்று கொள்ளலாம்.

ஓராண்டுக்கான பாஸ்: தனியார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளிலும் எக்ஸ்பிரஸ்வேக்களிலும் பயன்படுத்துகின்றனர் என்றால் அவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸினை பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஒரு முறை 3000 ரூபாய்க்கு ஃபாஸ்டேக் பாஸ் எடுத்துக் கொண்டால் போதும் அதனை பயன்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வேக்களில் ஓராண்டுக்கு கூடுதலாக எந்த கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
எந்த வாகனங்களுக்கு பாஸ் கிடைக்கும்: வணிக ரீதியில் இயங்காத கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு இந்த 3 ஆயிரம் ரூபாய் பாஸ்ட்டேக் டோல் பாஸ் என்பது வழங்கப்படுகிறது. ஒருமுறை 3,000 ரூபாய் செலுத்தி இந்த பாஸ் வாங்கி விட்டால் அந்த ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை எந்த கட்டணமும் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.
200 பயணங்கள் முடிந்துவிட்டால்?: ஒரு வேளை இந்த பாஸ் வாங்கப்பட்ட வாகனம் ஓராண்டுக்குள் 200 முறை சுங்கச்சாவடியை கடந்துவிட்டால் மீண்டும் ஒருமுறை 3,000 ரூபாய் செலுத்தி பாஸ் வாங்க வேண்டும், இல்லை என்றால் வழக்கமான சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓராண்டு காலம் அல்லது 200 பயணம் எது முதலில் முடிகிறதோ அதை பொறுத்து மாறும்.

ஃபாஸ்டேக் பாஸ் பெறுவது எப்படி: பொதுமக்கள் மிக எளிதாக இந்த ஓராண்டுக்கான சுங்க கட்டண பாஸை பெற்றுக் கொள்ளலாம். இதற்காகவே அரசு Rajmargyatra என்ற ஒரு செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக பாஸ் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இந்த ஓராண்டுக்கான பாஸை பெற முடியும்.
மாநில நெடுஞ்சாலைகளில் பொருந்துமா: இந்த 3,000 ரூபாய் மதிப்புள்ள ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் மட்டும் பொருந்தும். அதாவது இந்த பாஸ் வைத்திருக்கும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் வேக்களில் உள்ள சுங்கசாவடிகளில் மட்டுமே எந்த கட்டணமும் இல்லாமல் பயணம் செய்ய முடியும், மாநில நெடுஞ்சாலை துறை நிர்வாகம் செய்யும் சாலைகளி உள்ள சுங்க சாவடிகளில் வழக்கம் போல கட்டணம் செலுத்தி ஆக வேண்டும்.
எப்படி ஃபாஸ்டேக் பாஸினை பெறுவது: Rajmargyatra செயலி அல்லது NHAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் தொலைபேசி எண், வாகனத்தின் பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். உங்களுடைய வாகனம் பாஸ் பெறுவதற்கான தகுதிகள் பெற்றுள்ளதா என சரிபார்க்கப்படும் இதன் பின்னர் பணம் செலுத்துவதற்கான லிங்க் வரும் அதில் 3000 ரூபாயை யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் மூலமாக செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டவுடன் இந்த பாஸ் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட ஃபாஸ்ட் டேக் கணக்கில் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். இதற்கான எஸ்எம்எஸ் உங்களுடைய எண்ணுக்கு வந்துவிடும் . இந்த பாஸ் எந்த வாகன எண்ணிற்கு பதிவு செய்யப்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications